32 Essays

29

எதிர்காலத்தில் சிங்கப்பூரில் நம் தமிழ் மொழியை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும்!

எதிர்காலத்தில் சிங்கப்பூரில் நம் தமிழ் மொழியை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற தலைப்பையொட்டி பேச போகிறேன்.

வல்லரசு நாடுகளிலிருந்து குக்கிராமங்கள் வரைப் பரவலாக பேசப்படும் மொழி நம் தாய் மொழியான தமிழ் மொழி தான். ஆனால் பழமையும் சிறப்பும் மிக்க தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகின்றது. ஒரு நாட்டில், அதாவது சிங்கப்பூரில் தமிழைக் கட்டிக் காக்க வேண்டுமென்றால் அதற்கு முக்கியமாக அந்நாட்டில் நான்கு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசாங்கம், பள்ளிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களாகிய நாங்கள்.

இப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களில் மாபெரும் பங்கை ஆற்ற வேண்டியவர்கள் இளைஞர்கள் தான். நெல்சன் மண்டேலா கூறியதைப் போலவே ‘இன்றைய இளையர்கள் தான் நாளைய தலைவர்கள்’. இத்தலைமுறையின் இளைஞர்கள் தமிழின் சிறப்பை உணர்ந்து நடந்தால் தான் அடுத்த தலைமுறையினரும் அவர்களைப் பின்பற்றி தமிழைப் போற்றுவார்கள். ஆனால் அதில் ஒரு பிரச்சனை. இக்கால இளையர்களில் பெரும்பாலோர் தமிழின் சிறப்பை உணர்வதில்லை.தாய்மொழி தமிழ் மொழியாக இருக்கும்போதிலும் அவர்கள் அதைப் போற்றும் வகையில் நடந்துகொள்வதில்லை.வீட்டிலிருந்து பள்ளி வரை அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை தான் விரும்புகிறார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் பேசாவிட்டால் அவர்களுடைய நண்பர்கள் அவர்களைப் பற்றி தாழ்வாக எண்ணிவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். ஆங்கிலத்தில் பேசினால்தான் அவர்களுடைய கெளரவம் அதிகரிக்கும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் ஒன்றை உணர மறந்துவிடுகிறார்கள். பழமையான தமிழை மதிக்காமல் அதனைப் பற்றி தாழ்வாக எண்ணுவது அவர்கள் தங்களையே ஏளனப்படுத்திக்கொள்வதற்குச் சமமாகும். அதனால் இளையர்கள் இப்போதிலிருந்தே தமிழை மதித்து அதனுடைய சிறப்பை உணர்ந்து நடக்க வேண்டும்.

ஆனால் இளையர்கள் அவ்வாறு செய்வதற்கு அவர்களுடைய தனி உழைப்பு மட்டும் போதாது.இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களும் ‘தமிழ் எங்கள் பேச்சு அதுவே எங்கள் மூச்சு’ என்பதற்கேற்ப தமிழின் சிறப்பை உணர்த்தி அவர்களுக்குத் தமிழ் பற்றை ஏற்படுத்த வேண்டும். இக்கால இளையர்கள் தமிழில் பேசுவதற்கு தயக்கமடைவதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஏதேனும் ஒரு சில வார்த்தைகளைத் தவறாக உச்சரித்துவிட்டால் மற்றவர்கள் அவர்களைக் கேலிச் செய்வார்கள் அல்லது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தான். உதாரணத்திற்கு என் அத்தை என் வீட்டிற்கு வரும் போது நான் அவரிடம் வாங்க அத்தை என்பதற்குப் பதிலாக வாங்க அட்டை என்று அழைத்தால் அந்த வார்த்தையின் அர்த்தம் மாறிவிடுகிறது. இதனால் மற்றவர்கள், குறிப்பாக என் குடும்பத்தினர்கள் என்னைக் கேலிச் செய்வார்கள். இவ்வாறு நேர்ந்தால் பொதுவாகவே தமிழ் பேசுவதற்கு தயங்கும் இளையர்கள் மேலும் ஊக்கமின்றி தமிழை வெறுக்க தொடங்குவார்கள். ஆனால் அதற்கு பதிலாக குடும்பத்தினர்கள் பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக் காட்டி அன்பான மற்றும் சுவாரசியமான முறையில் உதாரணத்திற்கு நகைச்சுவையான முறையில் அவர்களின் தவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டும். மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குத் தமிழ் சார்ந்த புகழ்பெற்ற கவிதைகள் ஆத்திச்சுடிகள் போன்றவற்றை சிறு வயதிலிருந்தே அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். அதே சமயத்தில் பெற்றோரும் அதிக நேரம் வீட்டில் அவர்களுடைய பிள்ளைகளிடம் தமிழில் மட்டுமே பேசுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம் இன்றைய உலகில் தமிழ் வகுப்பில் கூட ஆங்கிலம் பேசும் மாணவர்கள் தான் அதிகம் உள்ளனர். அதனால் ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’ என்பதற்கேற்ப பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் தமிழின் சிறப்புகளை உணர்த்தி அவர்களிடம் தமிழ் பற்றை உண்டாக்க வேண்டும்.

இத்தனை வேலைகளையும் பெற்றோர்களே செய்து முடித்த பின் ஆசிரியர்களுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த வேலையும் இல்லை என்று எண்ணிவிடக் கூடாது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதோடு தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கற்றுத்தருவதும் ஆசிரியர்களின் கைகளில் தான் உள்ளது. இயல், இசை , நாடகம் என்ற முத்தமிழையும் ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை மாணவர்கள் ஆர்வத்தோடு கற்றுக்கொள்வதற்கு போட்டிகள் போன்றவற்றை ஏற்பாடுச் செய்யலாம். அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் தமிழ் வகுப்பில் ஆங்கிலம் மட்டுமே பேச விரும்பும் மாணவர்களுக்கு அறிவுரைக் கூறி அவர்களைத் தமிழில் பேச ஊக்குவிக்கலாம். உதாரணத்திற்கு மாணவர்களைச் சிறு சிறு கதைப் பத்திகளைப் படித்து பார்க்க முயற்சி செய்ய சொல்லலாம். அவர்களின் தவறுகளையும் அன்பாகத் திருத்தலாம். ஆசிரியர்களே இவ்வளவு செய்யும் போது அவர்கள் சொல்வதை மதித்து தவற்றைத் திருத்திக்கொள்வதும் திருத்திக்கொள்ளாததும் மாணவர்களின் கைகளில் தான் உள்ளது. தமிழைப் பாதுகாக்க வேண்டுமென்றால் மாணவர்கள் கூச்சமின்றி தமிழில் பேச முயற்சி செய்வது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

அதுமட்டுமின்றி இப்போது ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. ஏப்ரல் மாதம் என்றாலே சிங்கப்பூரில் தமிழ் மொழி விழாவின் கொண்டாட்டம் களைக்கட்ட தான் செய்யும். ஆனால் இந்த வருடமோ தவிர்க்க முடியாத இக்கோரோனாச் சூழலால் இவ்வருடம் அவ்வளவுக் கோலாகலமாக கொண்டாட முடியாமல் போய்விட்டது. ஆனால் அவ்வாறு இருக்கும் போதிலும் நம் சிங்கப்பூர் அரசாங்கம் தமிழ் மொழி விழாவை ஒதுக்காமல் மேலும் தமிழிற்குப் பெருமைச் சேர்க்கும் வகையில் இணையத்திலிருந்தே தமிழ் மொழி விழாவின் கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றது. பட்டறைகள், போட்டிகள்,கலைநிகழ்ச்சிகள் என பலவற்றை நாம் இணையத்திலிருந்தேக் கண்டு ரசிக்கலாம்.இவ்வளவையும் நம் அரசாங்கம் தமிழிற்காகச் செய்வதற்குக் காரணம் தமிழ்மொழி நம் நாட்டின் நான்கு அரசு மொழிகளில் ஒன்று. இம்மொழியை நாம் பயன்படுத்தாவிட்டால் நம்மில் அதிகம் பேர் பேசாவிட்டால் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து தமிழ்மொழி எதிர்காலத்தில் அரசு மொழியாக நீடிக்காமல் போய்விடும். இதனால் அடுத்த தலைமுறையினர் ‘தமிழ்  என்றால்  என்ன?’ என்று கேட்கும் நிலை ஏற்பட்டு விடும். ஆனால் இந்த பூமியில் தமிழனாகப் பிறந்துவிட்டு நாம் அத்தகைய நிலையைப் பற்றி எண்ணிக் கூட பார்க்க கூடாது. ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’என்ற மகாகவியின் மகத்தான கவிதைக்கேற்ப நாம் அனைவரும் நம் தாய் மொழியை நம்மை ஈன்றெடுத்த தாயைப் போல் பாதுகாக்க வேண்டும். தமிழை நேசிப்போம்.தமிழில் பேசுவோம். தமிழைப் பாதுகாப்போம். நன்றி!

Ref: 29-328727VG

26

நாளைய தமிழ்.

தமிழ் என்பது நம் அடையாளம்,நம் வரலாறு,நம் எதிர்காலம்.நமது வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட தமிழை,அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்ப்பது நம் கடமையாகும்.அக்கடமையை நாம் சரிவர செய்கிறோமா?நாம் அதை மேலும் எப்படி சிறப்பாக செய்யலாம்?

உலகின் மிக பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் இன்று பயன்பாட்டில் உள்ளது.அதற்கு காரணம் நம் முன்னோர்கள் தமிழை தங்கள் வீடுகளில் கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், தாய்மொழியாம் தமிழை தினந்தோறும் பேசினார்.ஆனால்,இன்றைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் வீடுகளில் தமிழை விட ஆங்கிலத்தில் தான் அதிகம் உரையாடுகின்றர் .இதனால் வருங்கால தலைமுறைகளுக்கு தமிழை பேசவோ படிக்கவோ தெரியாத நிலை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.அதனால்,நாளைய தமிழ் நிலைநிற்பதற்கு நாம் நம் முன்னோர்கள் போல வீடுகளில் தமிழை பேசி பழக வேண்டும்.அவ்வாறு செய்தால்,தமிழ் நம் வருங்காலங்களிலும் நீடுத்து நிற்கும்.

இத்தலைமுறையினர் செய்யும் மற்றொரு தவறு என்னவென்றால், தமிழ் இலக்கியங்களையோ புத்தகங்களையோ அதிகம் படிக்காததுதான்.இக்காலத்தின் பரபரப்பான வாழ்க்கைமுறையில்,நாம் அனைவரும் அதிகம் தமிழ் புத்தகங்களை படிப்பதில்லை.இதனால்,புதிய தமிழ் சொற்களை அறிவதற்கும் நம் மொழியறிவை மேன்படுத்திக்கொள்ளவதற்குமான வாய்ப்புகளை நாமே குறைத்துகொள்ள்கிறோம்.இதனால்,தமிழை மேலும் அறிந்துகொள்ளாமல் நாம் நம் தமிழ் மொழியறிவை கட்டுப்டுத்திக்கொள்கிறோம்.நாம் நம் மொழியறிவை கட்டுப்படுத்துவதன் மூலம்,வருங்கால தலைமுறையினர்க்கு தமிழை பற்றி முழுமையாக அறிந்துகோள்ளும் வாய்ப்பை  தடுக்கிறோம்.இதனால்,நாளைய தமிழ் வளர தடையாக நாம் மாறுகிறோம்.எனவே,தமிழ் மொழி வளர நாம் தினமும் சிறிது நேரமாவது  தமிழ் புத்தகங்களை படித்து நம் மொழியறிவை மேன்படுத்திக்கொள்ளவேண்டும்.

நாம் நாளைய தமிழ் நீடிப்பதற்கு மேலும் என்ன செய்யலாம் என்பதை அறிந்துவிட்டோம்.இப்போது,நாம் தமிழ் மொழி வாருங்களித்திலும் நீடிப்பதற்கு நாம் என்ன முயற்சிகளை எடுத்திருக்கிறோம் என்பதென்று அறியலாம்.

நமது சிங்கப்பூர் அரசாங்கம்,தமிழ் மொழி மென்மேலும் நீடிக்க பல திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.அதில் ஒன்றுதான் ‘தமிழ் மொழி மதம்’ எனும் ஒரு நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சி வருடம் ஒரு முறை நடக்கும்.தமிழ் மொழி மதம் முழுதும்,தமிழுக்கான பற்றை அதிகரிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.அதனால் சிங்கப்பூரர்கள் அந்நிகழ்ச்சிகளுக்கு சென்று தமிழை பற்றிய தங்கள் அறிவை மேன்படுத்திக்கொள்ளலாம்.அதுமட்டுமல்லாமல்,இந்நிகழ்ச்சிகளுக்கு செல்வதன் மூலம்,சிங்கப்பூரர்கள் தமிழை பற்றி நிறைய தகவல்களை அறிவதோடு,தமிழுக்கான தங்கள் பற்றை அதிகாரகின்றன .தமிழை அறிந்து புரிந்து அதற்கான பற்றை வளர்த்துக்கொள்வதால்,நம் தலைமுறையால் தமிழை பற்றி புதிய தலைமுறைகளுக்கும் கற்று தரமுடியும்.இதன் மூலம் அதிக தமிழர்கள் கொண்ட இந்தியாவில் மட்டுமின்றி,உலகத்தின் அனைத்து நாடுகளிலும் தமிழை பேசுபவர்களும் நேசிப்பவர்களுக்கு இருப்பார்கள்.

நாம் நாளைய தமிழ் வளர செய்யும் மற்றொரு சிறப்பான முயற்சி,சிறு வயதிலிருந்து,பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழை தாய்மொழியாக சொல்லித்தருவதுதான்.ஐந்து வளையாதது ஐம்பதில் வளையுமா எனும் பழமொழிக்கு ஏற்ப,சிறுவயதிலிருந்து தமிழை சொல்லிக்கொடுக்கவிட்டால்,எதிர் காலத்திலும் தமிழ் கற்பது கடினமாக இருக்கும் .சிறுவயதிலே,பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தரவுவது மிகவும் நன்றாகும்.அதனால்,தமிழை அவர்களால் சுலபமாகவும் சரளமாகவும் பேசவும் படிக்கவும் முடியும்.இதனால்,அவர்களால் புதிய தலைமுறையினர்களுக்கு தமிழை சிறப்பாக கற்றுத்தரமுடியும்.அதனால்,நாளைய தமிழால் மென்மேலும் வளர முடியும்

தமிழ் நம் வாழ்வுகளின் மிக முக்கியமான ஒரு பகுதியை இருக்கிறது.தமிழ் எனும் இந்த பரிசை பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் அதை கொண்டுபோய்சேர்ப்பதின் முக்கியத்துவத்தை என் உரையின் மூலம் அனைவரும் அறிந்திருப்போம் என்று நான் நிம்புகிறேன்.தமிழை பேசுவோம் தமிழை நேசிப்போம் தமிழை காப்போம்.

Ref:26-439045AR

 

 

31

தமிழ் மொழியை பாதுகாப்பது எப்படி?

தமிழ் மொழியை பாதுகாப்பது எப்படி? இப்படி ஒரு கேள்வியை பற்றி சிந்திக்கும் நிலைமைக்கு நாம் வந்து விட்டதை எண்ணி நான் மனம் வருந்துகிறேன்!

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று புரட்சிக் கவி பாரதி சொன்னபோதிலும் நம்மில் பலர் நான் தமிழன்டா என்று பெருமையுடன் சொல்ல தயங்குகிறோம் இதை மாற்றிக் கொள்வதுதான் நாம் செந்தமிழை காப்பாற்றுவதற்கான முதல் படிக்கட்டு ஆமாம் டா பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாடி பிறந்த தாய் தமிழின் பெருமை கொண்ட மகன்டா நான் என்று நாம் வீர குரல்கள் மேலோங்க வேண்டும்

தமிழ் மொழியை காப்பாற்றுவதற்கான வழிகள் என்று பார்த்தால் நாம் பல சமூக மன்றங்களில் விழிப்புணர்வு கொண்டு வருவது போல் தமிழ் மொழியை சார்ந்த விழாக்களை நடத்தலாம் தமிழ் எழுத்தாளர்களை கூட்டி வந்து அவர்களை பட்டறைகள் நடத்த சொல்லலாம் அது மட்டுமின்றி மாணவர்களை தமிழ் பாடல்கள் கேட்டு தமிழ் படங்களை பார்க்க ஊக்குவிக்கலாம்  மேலும் என் சொந்த அனுபவத்தில் தமிழ் மொழி  மீது நான் அதிகமாக ஆர்வம் கொள்ள காரணம் என்னவெனில் நான் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன் அதுமட்டுமின்றி பட்டிமன்றங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் சொற்பொழிவுகள் வழங்கி இருக்கிறேன் இவை அனைத்தும் எனக்கு தமிழ் மீது ஆர்வத்தை மேலும் வைத்துள்ளது அதுமட்டுமின்றி மாணவர்களிடம் தமிழர்களின் பெருமைகளைப் பற்றிக் கூறும் போது மாணவர்கள் நிச்சயமாக நம் தாய் தமிழை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வருவார்கள்

நான் ஏன் மாணவர்களை பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம் அதற்கு மூல காரணம் என்னவெனில் மக்களே ஒருமுறை சுவாமி விவேகானந்தர் சொன்னார் என்னிடம் நூறு இளைஞர்களைத் தாருங்கள் ஒரு பாரத தேசத்தை மாற்றி காட்டுகிறேன் என்று சொன்னார் அது இந்தியாவுக்கு மட்டும் பொருந்தாது சிங்கார சிங்கைகும் பொருந்தும் இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள் இளைஞர்களாகிய நாம் தமிழை காப்பாற்ற காப்பாற்றத்தான் வருங்காலத் தலைமுறையினர் தமிழின் பெருமையும் அதன் தத்துவத்தையும் புரிந்து கொள்வார்கள் சிங்கையில் தமிழின் சிறப்பை அறிய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது உதாரணத்திற்கு நம் வானொலி ஒலி 96.8 ஒளிபரப்பப்படும் தூய செந்தமிழை கேட்கும்போது நாம் தமிழை காப்பாற்றுவதில் ஒரு பெரும் பங்காற்றும் காரணம் மேலும் மேலும் ரசிகர்கள் இருக்கும்போதுதான் தமிழும் ஒரு பிரபலமான மொழி அதை நாம் காப்பாற்ற வேண்டும் என்று மற்ற இனத்தவர்களும் நம்முடன் இந்த முயற்சியில் இறங்குவார்கள் அப்படி பண்ணும் போது தமிழை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் மேலும் கூடும்.

தமிழ் இன்னும் உலகம் இருக்கும் வரை தாராளமாக வாழும் தமிழை பற்றி அந்த காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களின் நாம் படிக்கலாம் நான் ஒரு தமிழ் இலக்கிய மாணவி எனக்கு தமிழ் இலக்கியங்கள் படிப்பதற்கு மிகவும் பிடிக்கும். முதலில் நானும் தமிழ் புத்தகம் படிப்பதற்கு யோசிக்க தான் செய்தேன் ஆனால் அவற்றை படித்தால்தான் இளைஞர்களே நமக்கு அந்த புத்தகங்களின் அருமை தெரியும் தமிழ் புத்தகத்தை  படிக்கும் போது நாம் நம்மையே மறந்து விடுவோம் என்றே நான் கூறுவேன்  நல்ல நல்ல கதாசிரியர்கள் சிறப்பான கதைகளை நமக்காக எழுதியிருக்கிறார்கள் இதுபோன்ற புத்தகங்களை படிக்கும் போது நிச்சயமாக தமிழ் மொழியை நாம் சிங்கையில் காப்பாற்றுவோம் ஏனெனில் இப்படி ஒரு அழகான மொழியை எவ்வாறு நாம் அழிய விடலாம் என்ற நோக்கம் நம் மனதிற்குள் தோன்றும் அதுமட்டுமின்றி மக்களே நாம் எப்போதும் ஒரு விஷயத்தை நினைத்து பார்க்க வேண்டும் உலகத்தில் முதல் முதலாக உருவெடுத்த மொழிகளில் ஒன்றான தமிழ் இன்றும் உயிரோடு இருக்கிறது மற்ற மொழிகள் அழிந்து விட்டாலும் உயிரோட இருக்கும் சில மொழிகளில் தமிழும் ஒன்று அப்படி பெருமை வாய்ந்த மொழி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாடி வீர மன்னர்களால் பேசப்பட்ட மொழியை நாம் அழிய விடலாமா என்ற எண்ணத்தை நாம் கொண்டாலே நிச்சயமாக தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும்

இதை முன்னிட்டு நாம் என்னென்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்கலாம் நான் சொன்னது போல நிறைய தமிழ் சொற்பொழிவுகளை கேளுங்கள் முடிந்தால் நீங்களும் சொற்பொழிவுகள் கொடுங்கள் அதுமட்டுமில்லாம மொழிசார்ந்த போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள் அது மட்டுமின்றி தமிழ் மன்றங்களில் சேர்ந்து நம் பங்கை ஆற்றுவோம்

என்னை பொருத்தவரை மொழி என்பது மொழி ஒன்றை மட்டும் சார்ந்ததல்ல அது கலாச்சாரத்தையும் சார்ந்தது  ஆகையால் தமிழை காப்பாற்ற வேண்டும் என்றால் நிச்சயமாக நம் தமிழர் பண்பாட்டை கடைபிடிக்கவேண்டும் எப்படி எப்படி எல்லாம் கடைப்பிடிக்கலாம் என்று கேட்டால் நாம்  சில நாட்களில் வாழை இலையில் உணவை உண்ணலாம் அதுமட்டுமின்றி பாவாடை தாவணி வேஷ்டி சட்டை போன்ற உடைகளை அணியலாம் மேலும் இந்த ஒரு விஷயம் என் மனதைக் குத்திக் கொண்டே இருக்கிறது நான் தெரியாமல்தான் கேட்கிறேன் நீங்கள் பள்ளியில்தான் ஆங்கிலம் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் வீட்டுக்கு வந்த பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் தமிழ் பேசினால் என்ன 5 கிலோ குறைந்தா போய்விடுவீர்கள் சகோதரர்களிடமும் பெற்றோருடனும் இவ்வாறு பேசும் போதே நம் தமிழ்மொழியே நிச்சயமாக காப்பாற்றுகிறோம் ஒவ்வொருவரிடம் பேசும்போதுதான் தமிழ் மொழியின் ஆழ்ந்த சிந்தனைகளை பற்றி அறிவோம் காரணம் தமிழ் மொழியில் நீங்கள் சென்று உங்கள் பாட்டி இடம் பேசினீர்கள் என்றால் அவர்கள் அக்காலத்தில் உள்ள தமிழ் மொழி சார்ந்த பல மொழிகளிலும் திருக்குறள்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுவார்கள் அந்த திருக்குறள்களை கேட்கவே ஆஹா அருமையாக இருக்கும்.

இத்துடன் என் உரையின் முடிவிற்கு நான் வருகிறேன் என்னை பொறுத்தவரை தமிழ் மொழியை காப்பாற்றுவதற்கு நாம் நிச்சயமாக தமிழ் மொழியை பேச வேண்டும் மற்றும் நான் தமிழன்டா என்று பெருமையாக சொல்ல வேண்டும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பாரதியார் சொன்னதை நாம் நிச்சயமாக கடைப்பிடிக்க வேண்டும் நாம் நம் தாய் தமிழை தாய்க்கு நிகராக வைத்து பூஜிக்க வேண்டும். தமிழ் பேசுவோம் தலைநிமிர்ந்து நடப்போம் நன்றி வீர தமிழர்களே!

Ref: 31-138824KY

 

35.

 சிலரின் வீட்டில் பெற்றோர் தமது பிள்ளைகளிடம் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். இது கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசுவதால் தமிழில் பேசுவது அவர்களுக்கு கடிதமாகிறது. பள்ளியில் சொல்லித் தருவதெல்லாம் குருட்டுப் பாடமாக அமைகிறது. இறுதியில் பெற்றோருக்கு எதிர்பாராத வகையில் பிள்ளைகள் தமிழில் குறைந்த மதிபெண்கள் வாங்குவர். அதோடு, தமிழுக்கு ஆசையில்லாமல் தமிழ் மொழி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் வாழ்க்கையிலிருந்து அழிந்துவிடும். நாளைடைவில் ஒவ்வொரு தலைமுறையினரும் தமிழை விட்டுச் செல்வர். இதைத் தவிர்க்க நாம் தமிழில் பேச வேண்டும்;அதை அறிவுறுத்துவது இன்னும் சிறப்பாக இருக்கும். 

தமிழ் இலக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்துள்ளது. ராமாயணம்ஐம்பெரும்காப்பியங்கள் (சிலப்பதிகாரம், மணிமேகலை, சேவகா சிந்தாமணி, வலயபதி, குந்டலகேசி) முதலிய தமிழ் இலக்கிய வகைகளை சிலர் கேட்டிருந்தாலும் அதன் முழு கருத்து இக்கால தலைமுறையர்களுக்குப் புரியவில்லை;அவர்களில் சிலருக்கு இவையை எடுத்துரைப்பதற்கு யாரும் இல்லை. இதனால், புரியாத இதை அவர்கள் கைக்கல்விடுவர். இதனால், நமது விலையுயர்ந்த இலக்கியம் பூரணமாக அழிந்துவிடும். அதில் நம் சான்றோரின் வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. நமக்கு வாழ்க்கை பாடங்கள் கற்றுத் தரும் இலக்கியத்தைக் காபாற்ற நாம் நம் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே கதைகளாகவோ அல்லது இயங்குபடத்தின் வழியாகவோ எடுத்துரைக்க வேண்டும். நான் என் நண்பர்கள், உடன்பிறப்புஉறவினர்கள், அடுத்து வரும் தலைமுறையினர் முதலியவரிடம் எடுத்துரைப்பேன். இவ்வாறு நமது இலக்கியம் வருங்காலத்தில் வாழும்.

 

சிலர் பாடல் வழியாக கற்பர். இதனால், பாடல் வழியாக தமிழ் இனத்தை பற்றி கற்பிப்பது அவர்களுக்கு உதவியாக இருக்கும். அக்கால பாடலாசிரியர் எழுதிய பாடல்கள் ஒற்று வராது. இக்கால பாடலாசிரியர்களை விரும்பும் இக்கால தலைமுறையினர் அவர்கள் எழுதிய பாடல்களைதான் கேட்பர். உதாரணத்திற்குச் சமீபத்தில் வெளிவந்த என்சோய் என் சாமி‘. அதில் நம் நாட்டின் இலக்கியம் சில இருப்பதோடு சிறப்பான தமிழ் வார்த்தைகளும் உண்டு. இப்படிப்பட்ட பாடல்களை நான் என் நண்பர்களிடம் பரிதுரைத்து அவர்களின் மொழிவலத்தை அதிகரித்து தமிழை மேம்படுத்துவேன்.

 ஆனால், சிறு பிள்ளைகள் பாடல்களால் ஈர்க்காததால், இயங்குபடத்தின் வழியாக கற்றுத் தருலாம். இயங்குபடத்தின் வழி கதை எளிதில் பார்க்க முடிவதால் அதின் கருத்து சுலபமாக அறிந்துக்கொள்ள முடிகிறது. சிக்மண்ட் பிராய்ட் கூறியதுப் போல் சிறுவயதில் கிடைத்தவை நம் ஆயுள் முழுவதும் நம் மனத்தில் நீடீத்திருக்கும்‘. எனவே, இயங்குபடம் சிறு பிள்ளைகளுக்குக் காட்டுவதால் நமது தமிழ் மொழி இவ்வுலகில் நீடீத்திருப்பது கட்டாயம்.

 

பள்ளிகளில் படிப்பில் நடிப்புச் சார்ந்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துலாம். இக்கால தலைமுறையினர் செய்முறை பயிற்சிகள் விரும்புவர்;களிப்பூட்டும் பயிற்சிகள் விரும்புவர். எனவே, நடிப்பு சிறந்த நடவடிக்கையாக அமைகிறது. பொம்மலாட்டம் போன்ற நடவடிக்கைகள் ஆசிரியர்கள் திட்டமிட்டு செய்யலாம். இது மாணவர்களுக்குப் படிப்பு அனுபவமாக அமைவதோடு இயங்குபடம் போல பாடம் எளிதில் புரிய முடிகிறது. இதனால், அவர்களுக்கு மொழிப் பற்று வந்து தமிழை நேசித்து தமிழ் மொழி இவ்வுலகில் நீடீத்திருப்பது கட்டாயமாக செய்வர்.

 

 ஆனால், நாட்டு அளவில் வளர்ச்சி காண, நிறைய தமிழ் போட்டிகளையும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில், நாட்டில் இருக்கும் யவரும் இதில் கலந்துக்கொள்ளலாம்;நிறையவர் அதில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. நிகழ்ச்சிகளின்வழி மாணவர்கள் தமது திறனை வளர்த்துக்கொள்வதோடு அவர்களின் மொழிவலமும் அதிகரிக்கும். போட்டிகளின்வழி மாணவர்கள் தமது திறனை வெளிக்காட்டுவதோடு அவர்கள் தமது தவறுகளை உணர்ந்து அதிலிருந்து கற்று தம்மை மேம்படுத்திக்கொள்வர். எனவே, நாட்டு அளவில் கற்றலோடு மாணவர்களுக்கிடையே மொழிப்பற்று வளர்கிறது.

 

 தமிழ்மொழி நம் நாட்டின் நான்கு அரசு மொழிகளில் ஒன்று. இம்மொழியை நாம் பயன்படுத்தாவிட்டால், நம்மில் அதிகம் பேர் பேசாவிட்டால், பேசுவோர் எண்ணிக்கை குறைந்து போனால் தமிழ்மொழி எதிர்காலத்தில் எப்படி அரசு மொழியாக நீடிக்கும்?எனவே, நம் தமிழ் மொழியைப் பாதுகாக்கும் நாம் வருங்காலத்தில் இம்மொழி நீடீத்திரு அடுத்து தலைமுறையினரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அவர்களை நம் மொழியை பாதுகாக்க அறிவுறுத்த அதை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் நம் கூற்று நீடீத்திருக்கும்-தமிழில் பேசுவோம், தமிழை நேசிப்போம்

Ref: 35-459736

 

 

1

நமது தாய்மொழி தமிழ்

இந்த உலகத்தில் எண்ண முடியாத அளவுக்கு பல மொழிகள் உள்ளன.  இவற்றை விட நமது தாய்மொழி தமிழ் சிறப்பு வாய்ந்தது. இது உலகின் மூத்த மொழி, பல இதிகாசங்களை கொண்ட மொழி, இரண்டடியில் உலகை அடக்கிய மொழி, செம்மொழியாம் நம் தாய்மொழி.

ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு என பல கவர்ச்சியான மொழிகள் இருந்தாலும் நம் தமிழில் தான் மொழி நடை உள்ளது. தாய்மொழி நம் கண்களை போன்றது. பிற மொழிகள் வண்ணக்  கண்ணாடிகளை போன்றது. கண்ணாடிகளை நம் தேவைக்கு மாற்றிக்கொள்ளலாம். ஆனால் நம் கண்களை மாற்ற முடியாது.

தாய்மொழி என்பது நம் தாயின் தொப்புள் கொடியில் இருந்து வந்தது. அவள்தான் நாம் வயிற்றில் இருக்கும் போது நம்மோடு பேசி நம்மை வளர்த்தவள். தமிழ் மொழியை வளர்ப்பதில் நம் பெற்றோருக்கு அதிக பொறுப்பு உள்ளது. நமது உணர்ச்சிகள் அனைத்தையும் நம் தாய்மொழியில் தான் வெளிப்படுத்துகிறோம்.

தமிழை வளர்ப்பது என்பது, செடிகள் வளர்ப்பதைப் போன்று தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு, சூரிய ஒளியில் வைத்து வளர்ப்பது அல்ல.  அது உயிரோடு கலந்த ஒன்று.

“தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்று பெருமை கொள்ளவும்,

“கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே”

என்று  படிப்பின் அவசியத்தை விளக்கிச் சொல்லவும் நமது தமிழால் தான் முடியும்.

தமிழ் மொழிக்கு இராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களையும், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி , குண்டலகேசி போன்ற ஐம்பெருங்காப்பியங்களையும் கொண்ட பெருமை உள்ளது.

நம் முண்டாசு கவிஞன் கூட “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடினான்.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்” பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை சிறு வயதிலிருந்து கற்றுத் தந்தால் தான் அவர்கள் வளரும் போது நன்கு சரளமாக பேசுவார்கள்.

“சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்” என்பதுபோல நாம் பேசப் பேசத்தான் தமிழை வளர்க்க முடியும்.  சிங்கையில் நமது அரசாங்கம் தமிழை ஒரு அரசாங்க மொழியாக வைத்திருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?  தமிழின் மேலும் தமிழ் மக்களின் மேலும் உள்ள மதிப்பிலும் மரியாதையிலும் தானே. நாம் அதை எப்படி வளர்ப்பது, பாதுகாப்பது?.

நம் பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்கள் பலவகைகளில் தமிழில் பேசவும் சிந்திக்கவும் சொல்லித் தருகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு தமிழ் வகுப்புகளை, அவர்களின் கவனத்தை ஈர்க்கும் படி நடத்துகிறார்கள் . உதாரணத்திற்கு, சிண்டாவில்,  சின்ன சின்ன சமையல் வகுப்புகள் மூலம்  தமிழை கற்றுக் கொடுக்கிறார்கள். பிள்ளைகளும் ஆர்வத்தோடு கவனித்து, காய்கறிப் பெயர்களைத் தமிழில் எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். உற்சாகத்தோடு கலந்து கொள்வதால் அவர்கள் தமிழில் அதிகமாகப் பேசுகிறார்கள். இவற்றில் எல்லாம் பிள்ளைகளை கலந்து கொள்ள பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். ஓய்வு நேரங்களில் தமிழ் புத்தகங்களை படிக்கலாம், வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பழைய தமிழ் படங்களை பார்க்கலாம். குடும்பத்தோடு சேர்ந்து தமிழ் விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்க்கலாம். கற்க கசடற, சவால் சிங்கப்பூர் போன்ற நிறைய நிகழ்ச்சிகள் இருக்கின்றன. பிள்ளைகளும் பெற்றோர்களும் சேர்ந்து கேள்விக்கான பதிலை தமிழில் யோசிக்கலாம்.

இப்போதுள்ள தொழில்நுட்ப உலகில், தமிழில் தட்டச்சு செய்யவும், தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் இணையம் பேருதவியாக உள்ளது. அவற்றை பயன்படுத்த பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கலாம்.

சிங்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தை தமிழ் மாதமாக கொண்டாடுகிறோம். வளர்தமிழ் இயக்கம், தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் பிற சமூக அமைப்புகள் சேர்ந்து தமிழ் விழாவைக் கொண்டாடுகிறார்கள். கதை, நாடகம், பேச்சு, கவிதை, பட்டிமன்றம் என பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். இவையெல்லாம் எதற்காக? நமக்காகவும் நம் சமுதாயத்துக்காகவும் தானே. சிங்கப்பூரில் தமிழை வளர்த்து பாதுகாக்க தமிழ் பேசினால் மட்டும் போதாது. தமிழ் கலாச்சாரங்கள், பாரம்பரிய விளையாட்டுகள், இலக்கியம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். இதுதான் தமிழனுடைய அடையாளம். அதுதான் நம்முடைய அடையாளம்.

“சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்கு ஏற்ப நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் பங்கை ஆற்றினால்தான், தமிழை வாழையடி வாழையாக தொடர்ந்து, சிங்கப்பூரில் வளர்க்க முடியும்.

நாம் எந்த தேசத்தில் இருந்தாலும், நம்மை அடையாளம் காட்டுவது நம் தாய்மொழி தமிழ் தான். தமிழன் இல்லாத நாடே இல்லை என்று கூறலாம். தமிழனாய் இருந்து கொண்டு தமிழில் பேச வெட்கப்படுபவன் உண்மையான தமிழனே அல்ல. நாம் பேர் தமிழனாய்  இல்லாமல் பாரதி கண்ட தமிழனாய்  வாழ்வோம், தமிழை வளர்ப்போம்.

 

Ref: 1-268494-PG

 

 

23

எதிர்காலத்தில் நம் தமிழ் மொழியை பாதுகாக்க என்னவெல்லாம் செய்யவேண்டும்?

தமிழ்மொழி நம் நாட்டின் நான்கு அரசு மொழிகளில் ஒன்று. இம்மொழியை நாம் பயன்படுத்தாவிட்டால், நம்மில் அதிகம் பேர் பேசாவிட்டால், பேசுவோர் எண்ணிக்கை குறைந்து போனால் தமிழ்மொழி எதிர்காலத்தில் எப்படி அரசு மொழியாக நீடிக்கும். ஆகவே, எதிர்காலத்தில் நம் தமிழ் மொழியை பாதுகாக்க என்னவெல்லாம் செய்யவேண்டும்?

ஒளி படைத்த கண்ணினாய்

உறதி கொண்ட நெஞ்சினாய்

களி படைத்த மொழியினாய்

கடுமை கொண்ட தோழினாய்

தெளிமை பெற்ற மதியினாய்

சிறுமை கண்டு பொங்குவோம் என பாரதி உருவாக்கிய இளைஞர்கள் நாங்கள்!உலகத்திலேயே பழமை வாய்ந்த மொழி நம் தமிழ்மொழியே ஆகும்.5000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பேசப்படும் நம் மொழி இப்பொழுது அழியும் அபாயத்தில் உள்ளது என்பதை நினைத்துப் பார்த்தாலே மனம் பதறுகிறது.

’திரைகடல் ஓடி திரவியம் தேடு’ என்பதற்கேற்ப்ப பலர் வேளை வாய்ப்புகள் தேடியும் நல்ல வாழ்க்கையை தேடியும் வெளி நாடுகளுக்குச் சென்றனர்.இவர்களில் சிலர் தமிழர் என்ற அடையாளத்தையும் தமிழ்மொழியையும் இந்தியாவிலேயே வைத்து விட்டுச் சென்றனர்.மற்ற சிலர் பல்லின சமூதாயத்தல் வாழ்வதைக் காரணம் காட்டி,ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகி்ன்றனர்.தமிழில் பேசுவதை அவமாணமாக கருதும் சிலரும் உள்ளனர்.இதனால்,குடும்பத்தினரின் பழக்கங்களையே பின்பற்றும் இக்கால இளையர்கள் பலரும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று நான் கருதுகிறேன்

தமிழ் மொழி அற்புதமானது.எந்த மொழியிலும் இல்லாத பல அருமையான  இலக்கியங்களும் சிறப்புகளும் இதில் ஒளிந்திருக்கிறன.இந்த அருமையான விஷயங்களை இளையர்கள் உணர்ந்தால்தான் தாய்மொழியான தமிழ்மொழியை பயன்படுத்துவார்கள்,தக்கவைப்பார்கள், வளர்க்க பாடுபடுவார்கள்.தமிழ்மொழியைத் தங்கள் தாய்மொழியாக மட்டும் பார்க்காமல்,அதை கடவளுக்கு சம்மாக எண்ணி தமிழர்கள் சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்மொழிக்கெனக் கோவில் கட்டினர்.உலகத்திலேயே மொழிக்கென கோவில் கட்டிய பெருமை நம் தமிழ் மொழிக்கு மட்டும் தான் உண்டு!அதுமட்டுமல்லாமல்,’தமிழ் செல்வி’,’தமிழிசை’ எனத் தன் தாய்மொழியை பெயருடன் சேர்ப்பவர்கள் தமிழர்கள் மட்டும்தான்.

நம் மொழியில் பல பொன்னான வார்த்தைகள் உள்ளன..அவற்றில் பல பலரால்  மறக்கப்பட்டிருந்தாலும் எழுத்தாளர்கள் பலர் அவற்றை அவர்களது கவிதைகளிலும் பாடல்களிலும் சேர்ப்பதால் அவை மீண்டும் தமிழில் ஒரு.              பகுதியாகிவிடுகின்றன.இந்த பொன்னான வார்த்தைகளைப் பயன்படுத்தி நம் மொழியில் எழுதப்படும் பாடல்களுக்கும் கவிதைகளுக்கும் வேறு எதுவும் ஈடே இல்லை இந்த பூமியில்.அப்படிப் பட்ட சிறப்பு வாய்ந்தது நம் தமிழ் மொழி.

தமிழ் மொழியைத் தாம் சுவாசிக்கும் மூச்சு காற்றுக்கு ஈடாக கருதும் பலர் தமிழ் மொழியை கட்டிக்காக்க தங்களால் முடிந்தவற்றைச் செய்கிறார்கள்.உதாரணத்திற்கு,மகாகவி பாரதியார் தமிழ் மீது கொண்ட பற்றைக் கண்டு அவரையே தன் முன்னுதாரணமாகக் கொண்ட தமிழ் பாடல் எழுத்தாளர் ‘ஹிட் ஹாப் தமிழா’ என அழைக்கப்படும் ஆதி,தமிழ் மொழியைப் பற்றியும் அதனுடைய அருமை பெருமைகளை விளக்கியும் ‘தமிழி’ என்ற பெயரில் காணொளி தொடர் ஒன்றை வெளியிட்டார்.அது போல,நாமும் தமிழ் மொழியை பாதுகாக்க நம்மால் முடிந்நவற்றைச் செய்யலாம்.

குடும்பம்தான் மனிதனின் கருவறை.எல்லாமே குடும்பத்திலிருந்து தான் தொடங்கியது.இளைஞர்கள் முதலில் தங்கள் இல்லங்களில் தமிழில் பேசும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.பிறகு,தினமும் மாணவர்கள் 7 மணி நேரம் செலவிடும் பள்ளிகளில் மாணவர்களுல் தமிழ் மொழியில் ஆர்வத்தை விதைக்கலாம்.சிங்கையும் தமிழ் மொழி மாதம் போல,மாணவர்களுக்கு தமிழ் மொழி வாரம் என்று ஒரு வார்த்தை ஒதுக்கி,தமிழ் மொழியில் சிறப்புகளை விளையாட்டுகள் மூலம் மாணவர்களுக்கு வெளிப்படுத்தலாம்.உதாரணத்திற்கு,தமிழைப் படமாக மட்டும் கற்பிக்கும்,கபடி,பொம்மலாட்டம் என விளையாட்டுகள் மற்றும் கலைகளின் மூலம் மொழி விளையாட்டுகள் முலம் கற்பிக்கலாம்.இவ்வாறு செய்யும் போது,இளைஞர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் பிறப்பதுடன் மரியாதையும் அடையாளமும் பிறக்கும்.அடுத்த படியாக,அனைவரும் ஒன்று கூடும் சமுதாயமும் மாணவர்களுக்கு தமிழ் மொழியை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள போட்டிகள் நடத்தி,சிறப்பு வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யலாம்.இந்தப் போட்டிகளில் மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களுடன் பழகி அவர்களிடமிருந்தும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள பல வாய்ப்புகளை வழங்கலாம்.இதற்கெல்லாம் பெற்றோரின் ஆதரவு பக்கபலமாக இருப்பது அவசியம்.

இன்றைய தலைமுறையினருக்கு நாங்கள் நாளைய தலைவர்கள்.இந்தத் தலைமுறையை சேர்ந்தவர்கள் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக இருந்து தமிழ் மொழி பற்றை அவர்களுடனும் பகிர்ந்துக்க வேண்டும்.அதற்க்கு முதலில் நாம் அனைவரும் தமிழ் மொழியை பாதுகாக்க பாடுபட வேண்டும்.

தமிழை வெறும் பாடமாக மட்டும் பாராமல் விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் மூலமும் தமிழ் மொழி ஆர்வத்தை வலுப்படுத்த முயலும் உங்களுக்கு நன்றி!இந்த வாய்ப்பையளித்தமைக்கும் நன்றி.

“வாழ்க நிரந்தரம்

வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே!”

 

Ref: 23-389247KS

 

 

 

 24

எதிர்காலத்தில் நம் தமிழ் மொழியை பாதுகாக்க என்னவெல்லாம் செய்யவேண்டும்?

தமிழ்மொழி நம் நாட்டின் நான்கு அரசு மொழிகளில் ஒன்று. இம்மொழியை நாம் பயன்படுத்தாவிட்டால், நம்மில் அதிகம் பேர் பேசாவிட்டால், பேசுவோர் எண்ணிக்கை குறைந்து போனால் தமிழ்மொழி எதிர்காலத்தில் எப்படி அரசு மொழியாக நீடிக்கும். ஆகவே, எதிர்காலத்தில் நம் தமிழ் மொழியை பாதுகாக்க என்னவெல்லாம் செய்யவேண்டும்?

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம்”

என்று செஞ்சொற்கவி பாரதியார் அருளிப்போந்தார்.  எம்மொழியும் பிரவாகம் எடுக்காத பண்டைக்காலத்திலேயே உருப்பெற்ற முதன்மை மொழி நமது செந்தமிழ்! கல்வி, விழுமியங்கள், கலைகள் என அனைத்தையும் கற்பிக்கும் கலைக் களஞ்சியம் நமது தமிழ்! தமிழ் மொழி என்பது, ஒவ்வொரு தமிழனின் யாக்கையில் ஓடும் உதிரத்தில் கலந்திருக்கும் உயிர்ச்சாறு. “தமிழுக்கும் அமுதென்று பெயர் ” என்ற பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப  நமது தமிழ்மொழி விலைமதிப்பில்லா பொக்கிஷம் என்பதில் எள்ளளவும்  ஐயமில்லை! எனவே, இத்தகைய தன்னிகரற்ற வரப்பிரசாதத்தைப் பற்றிய விழிப்புணர்வும் நமது சமுதாயத்தில் நீடித்து வர வேண்டும். இல்லையெனில், நாம் நம் அடையாளத்தை இழந்து தவிக்க நேரிடும். ஆனால், எவ்வாறு  நமது தமிழ் மொழியைக் காப்பாற்றுவது?

முதலாவதாக, பெற்றோர்கள் தமிழறிவையும் பயன்படையும் பிள்ளைகளிடையே வளர்க்க வேண்டும்.  “முன்னறி தெய்வமான ” இவர்கள்,  சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்குத் தமிழின் அருமை பெருமைகளை போதிக்கவேண்டும். இன்றைய இளம் பெற்றோர் தங்களது குழந்தைகளின் ஆங்கில மொழி வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். தமிழில் உள்ள  ஐம்பெறும் காப்பியங்கள், கம்பராமாயணம் ஆகிய மெச்சத்தக்க தமிழ் இலக்கியங்களைச்  சிறார்களுக்கு எளிமையாகக் கற்பித்து நம் செம்மொழியின் பெருமையை உணர்த்த வேண்டும். இது சிறார்களின்  தமிழார்வத்தை நிச்சயம் வளர்க்கும்.

ஆனால் ஆர்வம் மட்டும் போதுமா? இன்றைய தமிழர்களின் வீட்டில் ஆங்கிலத்திலேயே வெகுவாக உரையாடுகின்றனர். தமிழ் வாழவேண்டும் என்றால் அதன் புழக்கம் அதிகரிக்க வேண்டும். எனவே, பெற்றோர்கள் வீட்டில் பிள்ளைகளிடம் பெரும்பாலும்  தமிழிலேயே உரையாட வேண்டும்.  பிள்ளைகள் தங்களது பெற்றோர்களைப் பிரிதிபலிக்கும் கண்ணாடி போன்றவர்கள் அல்லவா? அப்போதுதான் அவர்களும் தங்களது பெற்றோரைப் பின்பற்றித் தமிழில் பேசத் தொடங்குவர்.

வாரத்தில் ஒரு சில குறிப்பிட்ட  நாள்களில், சிறிதும் ஆங்கிலக் கலப்பின்றி முழுமையாகத்  தமிழிலேயே உரையாட வேண்டும் என்று பிள்ளைகளைப் பெற்றோர் கட்டாயப்படுத்த  வேண்டும். இதனால், தமிழில் சரளமாகப் பேசுவது அவர்களுக்குப் பழக்கமாகி, வாழ்நாள் முழுவதும் மொழிப்பற்று நீடிக்கும்.

தமிழைக் காப்பாற்றுவதில் தலையாயப்  பங்கு பள்ளிகளுக்கு உண்டு.   ஆனால் இன்றைய தமிழ் மாணவர்கள் சிலரோ கட்டாயப்படுத்தப்படுவதால் மட்டுமே தமிழ் பயில்கின்றனர். மதிப்பெண்களுக்கு மட்டுமே சிலர் தமிழ் கற்கின்றனர்.  இன்றைய பள்ளிகள் தமிழார்வத்தை வளர்க்கச்  சுவாரசியமான புதிர் போட்டிகள், விறுவிறுப்பான விவாதப் போட்டிகள், பாரம்பரிய விளையாட்டுக்ள ஆகியவற்றை நடத்துகின்றன.  ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் பெரும்பாலும் தாய்மொழி வாரத்தின் போது மட்டுமே நடைபெறுகின்றன. மாறாக, பள்ளிகள் ஆண்டு முழுவதும் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது மட்டுமே, தமிழ் மீதுள்ள  நாட்டம் மாணவர்களின் மனத்தில் ஆழமாக பதிந்து என்றும் நிலைத்து நிற்கும்.

ஆனால், அதே நேரத்தில் சமுதாயமும் தமிழ்மொழியின் புழக்கத்தை அதிகரிக்க மேலும் சில முயற்சிகளை எடுக்கலாம். இல்லையெனில், நமது செந்தமிழைப் பேணிக்காத்தல் என்பது எட்டாக் கனியாகவே இருக்கும். இளையர்கள் மட்டும் தமிழ் பேசினால் போதுமா?  நமது சமுதாயம் பெரியவர்களையும் தமிழை நடைமுறையில் பயன்படுத்த தூண்ட வேண்டும். இதற்கு ஏராளமான வழிகளுள்ளன. உதாரணத்திற்கு, அடித்தள அமைப்புகள்  தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை அமைத்து, தலைச்சிறந்த பேச்சாளர்களை வரவழைக்கலாம். இப்பேச்சாளர்கள்  தமிழின் அருமையை ஆர்வமூட்டும் வகையில் மொழிமீதுள்ள விருப்பத்தை ஆழப்படுத்தலாம்.

அது மட்டுமின்றி இக்கால இளையர்கள் நவீனமான முறையில், அதாவது  “ராப்” போன்ற புதுமையாக வடிவமைக்கப்பட்ட பாடல்களையே விரும்புகின்றனர், கேட்கின்றனர். எனவே, தமிழ்மொழி மாதத்தின் போது, சமூக மன்றங்கள் இத்தகைய முறையில் அமைக்கப்பட்ட தமிழ்ப் பாடல்களை வெளியிடலாம். இப்பாடல்களால் ஈர்க்கப்படும் தமிழர்கள், இப்பாடல்களை ஆர்வத்துடன் கேட்டு ரசிப்பர். இதுவும் தமிழைக் காப்பாற்றும் அல்லவா? பழைய பஞ்சாங்கத்தைப் பாடிக்கொண்டிருந்தால் இளைய  தலைமுறையை எவ்வாறு ஈர்ப்பது?

தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழ் சார்ந்த உள்ளூர் செயலிகளை உருவாக்கிக் கொடுக்கலாம். அதில் விளையாட்டுகள், தமிழ் நிகழ்வுகள் பற்றிய விவரங்கள், தமிழ் மக்களை ஈர்க்கக்கூடிய அம்சங்கள் போன்றவற்றை உள்ளடக்கலாம். இது இன்றைய மின்னிலக்க மக்களை வெகுவாக ஈர்க்கும். இன்று சிறுவர் முதல் பெரியவர் வரை ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களில் தமிழ்மொழி சார்ந்த சுவாரசியமான தகவல்கள், புதிர்போட்டிகள் போன்றவற்றைத் தயாரித்துப் பதிவேற்றம் செய்து சிங்கைத் தமிழர்களின் ஆர்வத்தை மேம்படுத்தலாம்.

இளையர்கள் இளையர்களுக்காக ஏற்பாடு செய்யும் நிகழ்வுகள் அதிகரிக்க வேண்டும். மூத்த மாணவர்கள் பாலர் பள்ளி மாணவர்களுக்குக் கதை நேரம், தமிழ் நடவடிக்கைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து படைக்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. தமிழ் அமைப்புகள் பள்ளிகளோடு இணைந்து இத்தகைய வாய்ப்புகளை இளையர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும். இளையர்கள் பலர் தமிழுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எண்ணுவதுண்டுதான். ஆனால், தயக்கம், வாய்ப்புக் குறைவு போன்றவை முட்டுக்கட்டைகளாக உள்ளன. அவர்களுக்கு மூத்த தமிழ் ஆர்வலர்கள் தக்க வழிகாட்டுதலை நல்க வேண்டும்.

சிங்கப்பூரில் பெயர் பதித்த வெற்றியாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பிறரோடு உரையாடும்போது, தமிழில் பேசுதல் வேண்டும். அப்போதுதான் அதிகமான இளையர்கள் பள்ளியை விட்டுச் சென்றாலும் தொடர்ந்து தமிழில் தயக்கமில்லாம் பேசுவர். வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் மொழிதான் நமது அடையாளம் என்ற உணர்வும் அதை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் சரளமாகப் பேச முடியும் என்ற தன்னம்பிக்கையும் இளையர்களுக்கு வரும். அப்போது நம் மொழி பட்டொளி வீசிப் பறக்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாண்டின் தமிழ்மொழி விழா இளையர்களையும் மாணவர்களையும் மையமாகக் கொண்டதாக அமைகிறது. இது பாராட்டத்தக்க முயற்சி. இளையர்களை ஈடுபடுத்தும் இவ்வாறான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

சிங்கையில் நமது செந்தமிழ் மொழியைக் காப்பாற்ற பற்பல வழிகளுள்ளன.  தமிழைப் பேணி காப்பது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமையாகும். தமிழ் என்ற கடலில், நாம் அனைவரும் சிறு துளிகளே. ஆனால், “சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்கேற்ப, நாம் ஒவ்வொருவரும் தமிழ் மொழியைப் பாதுகாக்க கைக்கொடுக்க வேண்டும். அப்போது மட்டுமே, நமது சிங்கையில் தமிழ் மொழி மேலோங்கி வளரும். தமிழ் மொழி நமது தாய் மொழி அல்லவா? தாய் போன்ற நமது தமிழுக்குக் தொண்டு செய்வது நமது தார்மீகக் கடப்பாடு அல்லவா? தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்!

 

Ref: 24-188389AS

 

 

9

நாளைய தமிழ்”   

தேமதுரத் தமிழோசைப்  பார் எங்கும் பரவச் செய்வோம்.

“நாளைய தமிழ்”

செம்மொழியாம் நம் முத்தமிழின் நாளைய நிலை குறித்து தமிழமுதை உயிராய் மூச்சாய் போற்றியவர்களின்

கவலைக் கேள்வி?

தமிழ்மொழியின் சிறப்பினையைம் தொன்மையையும் , இனிமையையும்,அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற தாய்மொழிப்பற்றுடன் பெரியவர்களாகிய உங்களின் வழிகாட்டுதலில் நாளைய தமிழை நாங்கள் நலமுடனும் வளமுடனும் மேலும் சிறப்பித்து

தலைமுறை பல கடந்து

என்றும் வாழும் மொழியாக வாழவைப்போம் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.  ஐயா!

இளையர்களாகிய எங்களின்அளப்பரிய பல திறன்களை ஜல்லிக்கட்டு போராட்டத்திலும், இயற்கை சீற்றமாகிய வர்த்தாபுயல் வேளையிலும் நீங்கள் அனைவரும் அறிந்ததே!

இயற்கை விவசாயம் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை எடுத்த காரியம் யாவினும் வெற்றி நடைப் போட்டுக்கொண்டிருக்கிறோம் நாங்கள்.

இன்றைய இளைய சமுதாயத்தினராகிய நாங்கள் நாளைய நவீன சமூகத்தைச் செதுக்கும் சிற்பிகள்.

தமிழ் மொழி வளர்ச்சியிலும் இளையர்களின் பங்கு அளப்பரியது என்றே சொல்ல வேண்டும்.

தமிழ்மொழி விழாக்கள் நடத்தும் 40 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கதை கவிதை, கருத்தரங்கம், திருக்குறள் ,பேச்சுப் போட்டிகள் , குறும்படம், பொம்மலாட்டம்

என பல்வேறு நிகழ்வுகளில் அதிக ஆர்வத்துடனும், அதிகம் கற்றுக்கொண்டும் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள்.

“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது “

என அனைவரும் வியக்கும் வண்ணம் தொடக்க பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை

அனைவரும் அதிகமான எண்ணிக்கையில் பங்கேற்று மிகச்சிறப்பாக  தமிழ்மொழி வளர்சிக்கு உரம் சேர்க்கிறார்கள்.

மொழி என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி மட்டும் அல்ல, நம் பண்பாட்டின் அடையாளம் என்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறோம்.

ஒழுக்கத்தை போதிக்கும் நூல்கள்,

உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூல்கள்தான் எத்தனை ! எத்தனை!

இவற்றை எல்லாம் நாங்கள் கற்று எங்களின் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுச்செல்ல கடப்பாடு கொண்டிருக்கிறோம்.

நாளைய தமிழை வளர்க்க உயர்த்த சிறப்பிக்க  இளையராகிய நாம் பின்பற்ற வேண்டியவை

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல் இனிதாவது எங்கும் காணோம்“ என்ற பாடல்வழி

நாம் எப்பொழுதும் இனிய தமிழில் பேசவேண்டும் – தமிழ் தெரிந்தவர்களிடம்.

நம் வீட்டிலும் பெற்றோர்கள், உடன்பிறப்புகள் உறவினர்களுடன் தமிழில் பேசவேண்டும்.

வளர்தமிழ் படிக்கும் நாம் தமிழை வளர்க்க வேண்டும் என்ற உணர்வுடன் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

புரியாத புதுப்பெயர்களைத் தவிர்த்து  குழந்தைகளுக்குத் தமிழ் பெயர்கள் வைக்க வேண்டும், பிறந்த நாள் பாடல் முதல் இறைவழிபாடல் வரை

அனைத்தும் தமிழில் வேண்டும்.அறிவியல் உலகை ஆளும் காலம் இது. விஞ்ஞானக் கண்டுப்பிடிப்புகள் வாழ்வை வழிநடத்தும் நேரமிது, எனவே

அறிவியல் சார்ந்த புத்தகங்கள் பல தமிழில் எழுதப்படவும் , மொழிபெயர்க்கப்படவும் வேண்டும்.

அறிவியல் சார்ந்த பண்பாட்டு விளக்கங்கள் தரப்பட வேண்டும்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர் மூவேந்தர்கள்.

விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானத்தையும்  அறிந்து புரிந்து

இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் உடன் அறிவியல் தமிழ் என நாளைய தமிழ் சீரும் சிறப்புமாக வளரும்.

இந்த பூமி சுழலும் வரை, இவ்வுலகில் கடைசித் தமிழன் மூச்சு உள்ளவரை தமிழ் சிறந்து வாழும்.

தமிழை நேசிப்போம் !

தமிழில் பேசுவோம் !

தழிழை தலைமுறைகள் கடந்து சிறப்பிப்போம் ! வாழ்க நம் தாய்த்தமிழ்!

Ref: 089837EK

 

 

10

தமிழ் மொழியை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணும் என்ற பாரதியாரின் வரியை நாம் படித்திருப்போம். முதலில் நாம் நம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். மொழி என்பது வெறும் அடையாளம் மட்டுமன்று ஒரு நாட்டின் பண்பாட்டை பதிவு செய்கிற ஊடகமாக அது விளங்கி வருகிறது. உலகத்தில் முதன் முறையாக எழுதப்பட்ட சுயமுன்னேற்ற நூல் நாம் திருக்குறள். அப்படிப்பட்ட தமிழ் மொழியை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. முதலில் ஒவ்வொரு தமிழனும் தமிழில்தான் பேச வேண்டும். நாம் நம் வீட்டில் இருந்து இதை ஆரம்பிக்க வேண்டும். பிறகு நண்பர்கள் உறவினர்கள் என்று அனைவரிடமும் தமிழில் நாம் பேசவேண்டும். அதுமட்டுமின்றி நம்முடன் தமிழ் பயிலும் மாணவர்களிடம் தமிழில்தான் பேச வேண்டும்.அவர்களுக்கும்

இதை வலியுறுத்த வேண்டும். சிங்கப்பூரில் பல வழிகளில் நம் தமிழ்மொழியை பாதுகாக்கலாம். எப்படி என்றால் நாம் நடத்தும் திருமண விழாவிலும் பிறந்த நாள் விழாவிலும் நாம் பரிசுப்பொருட்களை  வழங்கும் போது அது தமிழ் சார்ந்த புத்தகமாக கொடுக்கலாம். மேலும் சிங்கப்பூரில் பல தமிழ் போட்டிகள் நடக்கின்றன. அதில் நிறைய கலந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பேச்சுப்போட்டி கதை போட்டி பாட்டுப் போட்டி எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். மேலும், நூலகம் சென்று தமிழ் நூல்களை படிக்கலாம். நாம் வாழ்க்கையில் எப்படி வாழலாம் எப்படி வாழக்கூடாது என்று சொல்ல பல நூல்களையும் காவியங்களையும் நம் முன்னோர்கள் நமக்காகவிட்டு சென்றிருக்கிறார்கள். திருக்குறள் மகாபாரதம் இராமாயணம் இவையெல்லாம் நமக்கு உதாரணங்கள். நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்து அழைக்க வேண்டும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தமிழின் முக்கியத்துவத்தையும் அதன் பெருமையும் பற்றி கூற வேண்டும். நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றது ஏராளம். தமிழ் மொழியின் அருமையை நாம் எவ்வளவு கூறினாலும் அது போதாது. அள்ள அள்ள குறையாத செல்வம் போல தமிழின் பெருமை வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்ட தமிழை நாம் உயிர் மூச்சு போல் காத்து வருங்கால நாம் சந்ததினருக்கு தமிழின் அருமையையும் பெருமையையும் எடுத்துக் கூற வேண்டும். தாயை நேசிப்பது போல் நாம் நம் தமிழ் மொழியை நேசிப்போம். அதை இன்றில் இருந்து ஆரம்பிப்போம் முதலில் நம் கையெழுத்தை தமிழில் போடுவோம். நாம் வருங்கால சந்ததியினருக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம். தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் மூச்சு. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

 

Ref: 348332MA

 

 

13

சிங்கப்பூரில் எதிர்காலத்தில் நம் தமிழ்மொழியை பாதுகாப்பது எப்படி?

வாசிப்போம்! சுவாசிப்போம்!

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை தூய உருப்பளிங்கு போல்வாள் என் தமிழ்த்தாய்க்கு முதல் வாழ்த்து. இங்குறையும் நீர் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த மறுவாழ்த்து.

நான் இன்று, சிங்கப்பூரில் எதிர்காலத்தில் நம் தமிழ்மொழியை பாதுகாப்பது எப்படி என்ற தலைப்பினின் கீழ் பேச  இருக்கின்றேன்.

இன்றைய தமிழ்விழா போட்டிகளுக்கு பங்கேற்கும் இளைஞர்களை பார்க்கும் போது எதிர்காலத்தில்  நம் தாய்த்தமிழ் சிறப்பாக இருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. ஆனாலும் பாரதியின் ” யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்  இனிதாவது எங்கும் காணோம்” என்கின்ற வரிகளை மெய்ப்பிக்க வேண்டுமென்றால் நம் தாய்த்தமிழை பாதுகாக்க வேண்டும்.

இத்தலைப்பை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று மூன்று பிரிவாக பேச இருக்கின்றேன்.

முதலில் இளைஞர்கள், மாணவர்கள்.

நாளைய உலகை செதுக்கும் சிற்பிகளாகிய நாம் என்ன செய்ய வேண்டும். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுப்பது அதிகரித்திருக்கிறது. ஆனால் புத்தகங்களை வாசிப்பவர்களின்  எண்ணிக்கை இன்னும் குறைவாகத்தான் இருக்கிறது. நம் தாய்த்தமிழை  வாசிப்பதோடு மட்டுமல்லாமல் சுவாசிக்க முயலவேண்டும்.

 

மாணவர்களாகிய நாம்,  பள்ளிப்பாடத்தில் தமிழ் பாடத்தை நன்றாக செய்து உயர்தமிழ் பாடத்தையும் தேர்வு செய்து படிக்க வேண்டும். நம் தாய்த்தமிழில் புலமை பெற வேண்டும். அதன் மூலம் நம் தாய்த்தமிழை பாதுகாக்க முடியும்.

அதற்கு ஆசிரியர்களும் ஆர்வத்துடன் வரும் மாணவர்களின் எண்ணிக்கையை பார்க்காமல் எண்ணங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

பெற்றோர்கள்  வீட்டில் பிள்ளைகளிடம் தமிழ் மொழி உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். பிள்ளைகள் ஆங்கிலத்தில் பதில் அளித்தாலும் பெற்றோர் தமிழில் பேச வேண்டும். பிள்ளைகள் தானாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.

பிறக்கும் நம் குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுங்கள்.  எதிர்காலத்தில்  எங்கெங்கும் தமிழ்ப்பெயராக இருக்கும்படி செய்யுங்கள்.

“தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப தமிழனாய் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் தமிழ் உயிராகும். அதனால்தான் தாய்மொழி என்று கூறுகிறோம்.

நாம் தமிழ் மொழியோடு மற்ற மொழிகளையும் கற்பதால் தமிழ்மொழிக்கு எதிர்காலம் இல்லையோ என்று அச்சப்படத் தேவையில்லை.

நம் தாய்மொழியாகிய தமிழ் மொழியை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். நம் சுவாசமே தமிழாக  இருக்கும்போது  தமிழ்மொழியின் எதிர்காலம் இன்றை விடவும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் துளியளவும் ஐயம் இல்லை.

 

தமிழை நேசிப்போம்! வாசிப்போம்! சுவாசிப்போம்! கொண்டாடுவோம்! நம் தமிழ்மொழி என்றென்றும் வாழும்! நன்றி! வணக்கம்!

Ref: 479736BR

 

 

2.

தாய்மொழியை நேசிக்க வேண்டும்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணும் என்ற பாரதியாரின் வரியை நாம் படித்திருப்போம். முதலில் நாம் நம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். மொழி என்பது வெறும் அடையாளம் மட்டுமன்று ஒரு நாட்டின் பண்பாட்டை பதிவு செய்கிற ஊடகமாக அது விளங்கி வருகிறது. உலகத்தில் முதன் முறையாக எழுதப்பட்ட சுயமுன்னேற்ற நூல் நாம் திருக்குறள்.

அப்படிப்பட்ட தமிழ் மொழியை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

முதலில் ஒவ்வொரு தமிழனும் தமிழில்தான் பேச வேண்டும். நாம் நம் வீட்டில் இருந்து இதை ஆரம்பிக்க வேண்டும். பிறகு நண்பர்கள் உறவினர்கள் என்று அனைவரிடமும் தமிழில் நாம் பேசவேண்டும். அதுமட்டுமின்றி நம்முடன் தமிழ் பயிலும் மாணவர்களிடம் தமிழில்தான் பேச வேண்டும்.

அவர்களுக்கும் இதை வலியுறுத்த வேண்டும். சிங்கப்பூரில் பல வழிகளில் நம் தமிழ்மொழியை பாதுகாக்கலாம். எப்படி என்றால் நாம் நடத்தும் திருமண விழாவிலும் பிறந்த நாள் விழாவிலும் நாம் பரிசுப்பொருட்களை  வழங்கும் போது அது தமிழ் சார்ந்த புத்தகமாக கொடுக்கலாம். மேலும் சிங்கப்பூரில் பல தமிழ் போட்டிகள் நடக்கின்றன. அதில் நிறைய கலந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பேச்சுப்போட்டி கதை போட்டி பாட்டுப் போட்டி எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். மேலும், நூலகம் சென்று தமிழ் நூல்களை படிக்கலாம். நாம் வாழ்க்கையில் எப்படி வாழலாம் எப்படி வாழக்கூடாது என்று சொல்ல பல நூல்களையும் காவியங்களையும் நம் முன்னோர்கள் நமக்காகவிட்டு சென்றிருக்கிறார்கள். திருக்குறள் மகாபாரதம் இராமாயணம் இவையெல்லாம் நமக்கு உதாரணங்கள். நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்து அழைக்க வேண்டும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தமிழின் முக்கியத்துவத்தையும் அதன் பெருமையும் பற்றி கூற வேண்டும். நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றது ஏராளம்.

தமிழ் மொழியின் அருமையை நாம் எவ்வளவு கூறினாலும் அது போதாது. அள்ள அள்ள குறையாத செல்வம் போல தமிழின் பெருமை வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்ட தமிழை நாம் உயிர் மூச்சு போல் காத்து வருங்கால நாம் சந்ததினருக்கு தமிழின் அருமையையும் பெருமையையும் எடுத்துக் கூற வேண்டும். தாயை நேசிப்பது போல் நாம் நம் தமிழ் மொழியை நேசிப்போம். அதை இன்றில் இருந்து ஆரம்பிப்போம் முதலில் நம் கையெழுத்தை தமிழில் போடுவோம். நாம் வருங்கால சந்ததியினருக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம். தமிழ் எங்கள் பேச்சு தமிழ் எங்கள் மூச்சு. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.

 

Ref: 2-348332AS

 

 

 

3.

சிங்கப்பூரில் தமிழ் மொழியை எவ்வாறு பாதுகாக்கலாம்

நாளைய தமிழ்!

“எண்ணிய முடித்தல்  வேண்டும்,

நல்லவே எண்ண வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்த  நல்லறிவு  வேண்டும்”.

என்ற மகா கவியின் வரிகளை நினைவு கூர்ந்து எதிர்காலத்தில் சிங்கப்பூரில் தமிழ் மொழியை எவ்வாறு பாதுகாக்கலாம் என்ற அருமையான தலைப்பில் பேசுவதற்கு வாய்ப்பளித்து இங்கு அமர்ந்திருக்கும் ஆன்றோர்கள் சான்றோர்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு மொழி என்பது நம் கருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாறி கொள்வதற்கு உண்டான ஒரு கருவி. அனைத்து மொழிகளும் சிறப்பானவை தான்,அனால் தாய்க்கு கொடுக்க வேண்டிய சிறப்பை நமது தாய் மொழிக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் என் கருத்து.

நம்ம முக்கியமா புரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் மூன்று:

மொழியோட முதல் பயன்பாடு பேச்சு. ஒரு மொழி முதன்மையாகவும் அதிகமாகவும் எங்கே உபயோக படுகிறது என்றால் பேசுவதற்குதான். நீங்க செந்தமிழில் பதிவு எழுதுவதாலேயோ அல்லது தொல்காப்பியம், சீவகசிந்தாமணி, புறநானூறு, என்று படிப்பதாலேயோ மட்டும் தமிழ் வளர்ந்து விடாது. நீங்க யார் கிட்ட பேசினாலும் அவங்களுக்கும் தமிழ் தெரிஞ்சா அவங்க கூட தமிழில் பேசினாலே உங்களுக்கு புண்ணியமா போகும்.

எந்த மொழியா இருந்தாலும் அது பேச பேச தான் வளரும். எழுத்து உருவே இல்லாத மொழிகள் எவ்வளவோ இருக்கு ஆனால் பேச்சு வழக்குல இல்லாம வெறும் எழுத்து மட்டும் இருக்கிற மொழிகள் ரொம்ப கம்மி. பேசப்படும் மொழி மனிதன் இருக்கும் வரை வளரும் ஆனால் வெறும் எழுத்து உரு மட்டும் இருக்கிற மொழி ரொம்ப நாள் தாங்காது.

செம்மொழியாம் நம் தமிழ் மொழி உலகிலேயே மிக பழமையான மொழி. நம் மொழி என்றென்றும் வாழ்வதற்கு முதலில் பெற்றோர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளை குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். பரவலாக பல நாடுகளில் ஆங்கிலம் பேசப்படுவதால் நாம் அவர்களுடன் தொடர்பு மற்றும் நட்பு வைத்து கொள்ள ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் தாய்மொழிகளில் பின்தங்கி விடுகிறோம். முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை தாய்மொழியில் பேச ஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசுவது மிக அவசியம். முக்கியமாக வீடுகளில் அவர்கள் தமிழில் பேச வேண்டும். சிறு வயது முதலே தமிழில் கேட்டு தமிழில் பதில் சொல்லி வளரும் பிள்ளைகள் தமிழை நன்றாகவே பேசுகிறார்கள். குழந்தைகள் தமிழ் மொழியை கற்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

  1. பொது ஜனத்துக்கு புடிச்சது புதுமையே.அந்த காலத்துல கவிதை கதை இதெல்லாம் தமிழ் தெரிஞ்சா மட்டும் படிச்சிட முடியாது. ஏன் என்றால் எல்லாமே வெண்பா செய்யுள் வடிவுல இருக்கும்போது ஜனத்துக்கு புரியாது.

ஒரு முக்கியமான விஷயத்தை நீங்க கவனிச்சிருந்தா புரியும், தமிழ் பத்தி எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடந்தாலும் இல்ல வெளியில எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அந்த மேடை வடிவமைப்பு அலங்காரங்கள் எல்லாமே நம்ம பழைய நாகரீகத்தையும் புராணங்களையும் குரிக்கிற மாதிரி தான் இருக்கும். தெளிவா சொல்லனும்னா தமிழ் என்றாலே  ஒரு பழமையான தொன்மையான மொழி என்கின்ற எண்ணத்தை தான் வரவழைக்கும். குறிப்பா இவை குழந்தைகளுக்கோ இளைய தலைமுறையினருக்கோ சுத்தமா பிடிக்காது. தமிழ் உண்மையா வளரணும்னா பழங்கதைகள் பேசாம புதுமையா  ஏதாவது பேசணும். தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் பழமையானது என்கின்ற எண்ணம் நீக்கப்பட்டு தமிழ் இன்னும் இளமையானதுங்கிற என்னத்த வரவழைக்கணும். குறிப்ப குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் புடிக்கிற மாதிரி புதுமையா இருக்கணும், “மாறாதது மாற்றம் மட்டுமே” ன்னு சொல்லுவாங்க இந்த உலகத்துல எது புதுமைகளை தனக்குள்ள ஏத்துக்கிட்டு பரிமாணம் அடையுதோ அது மட்டும் தான் பிழைக்கும் இது மொழிக்கும் பொருந்தும்.

  1. இன்றைய உலகமயமாதல் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு ஏற்பவும் தமிழை ஈடுகொடுக்க செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் இணையமும்,தகவல் தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

சிங்கப்பூர் ஒரு தகவல் தொழில் தொடர்பு தொழில்நுட்ப மையமாக இருக்கிறது. ஆகவே தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தில்  தமிழை இடம்பெற செய்வதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் ஏனனில் எதிர்காலக் கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு அளவற்றது. சிங்கப்பூரில் 81சதவீத குடும்பங்களில் இணைய வசதி உண்டு. இதை பயனுள்ள வழிகளில் செயல்படுத்தினால் எதிர்காலத்துக்கு உதவும் வகையில் மாணவர்கள் சிறப்பாக கற்கவும் , கருத்து  பரிமாறவும் முடியும். இணையம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தற்போது ஆசிரியர்களும் திறம்பெற்று விளங்குகின்றனர். இணையத்தில் உள்ள வங்களை பயன்படுத்தி ஆசிரியர்கள் இயல்பான முறையில் சிறப்பாக கற்பிக்க முடியும். மாணவர்கள் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய மொழி திறன்கள் மேம்படும். எதிர்காலத்தில் தமிழ் பேசும் இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பத்தை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவர்.

இவை அனைத்திலும்  மாற்றம் காண நம் எண்ணங்களில் மாற்றம் வேண்டும். இவை அனைத்தையும் நான் விரும்பும் மாற்றங்கள் என்பதை விட நாம் விரும்பும் மாற்றங்கள் என மாற்றுவதே எனது முதல் கடமையாக இருக்கும்.

“மொழியாகி மூச்சாகி நாளை முடிசூடும் எமது தமிழ் மீது உறுதி .

வழிகாட்டி எம்மை உருவாக்கு எமது தமிழ் வரலாற்றின் மீது உறுதி.

தமிழால் இனைந்து தமிழராய் உயர்வோம்.”

Ref: 3-279626AY

 

 

 

 

5

நாளை நமதே

கல்தோன்றி  மண்தோன்றா  காலம் முதல் நம் பூமியில்பொன்போலப் பொலியும் மொழியாம் நம் தமிழ் மொழி. அந்த மொழியை நாம் எந்த அளவிற்கு மதிக்கிறோம் . யாமறிந்த மொழிகளிலே  தமிழ்மொழி போல் இனிதானது எங்கும் கானோம் என்று  அன்றே பாரதி முழங்கினார்.

இன்று சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாம் நம் தமிழ் மொழி என்பதை மார்தட்டி சொல்லிகொள்ளும்  நாம் அதை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுச் செல்ல என்ன செய்து இருக்கிறோம் என்பதை என்றாவது சிந்தீத்ததுண்டா? சிங்கப்பூர் போன்ற பல இன கலாச்சாரத்தில் ஆங்கிலம் எல்லாருடனும் கருத்து பரிமாற்றம் செய்வதற்கு தேவைதான் ஆனால் தமிழ் மக்களை சந்திக்கும் நேரத்திளாவது தமிழில் உரையாடலாமே ?

பிற மொழி கற்றால் பயன் தரும் என்று நினைக்கிறார்கள். இதனால் சிங்கையில் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது மிகவும் வாருத்ததை அளிக்கிறது. இப்படியே போனல் தமிழின் எதிர்காலம் என்னவாகும்.எப்படிகும் முதற்ப்படியாய் தமிழ் படிக்கவேண்டும் என்ற ஆன்றோரின்  சொலபடி நம் பிள்ளைகளை தமிழ் படிக்க  ஊக்குவிக்க வேண்டும். தமிழாசிரியர்கள்  தங்கள் மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடத்தில் ஆர்வத்தை தூண்ட விளையாட்டு முறையிலும், தொழில் நுட்பத்தையும் பயன் படுத்தியும் கற்பிக்கிறார்கறள். ஆனால் அந்த பற்றும், ஆர்வமும் தொடர்கிறதா?

எந்த ஒரு மொழியும் பயன்பாட்டில் இல்லை என்றால்  நாளடைவிள் சிதைந்து இருந்த இடம் தெரியாமல் போகும். இந்நிலையிலிருந்து மீள இல்லங்களிலிருந்து தான் எதுவும் தொடங்க வேண்டும்.ஆம் அழிந்த போன ஹீப்ரூ மொழியை அந்நாட்டு மக்கள் அவ்வாரு தான் புதுபித்தார்கள். இப்போதும் நாம் நம்மிடம் இருந்தே  தொடங்குவோம்.நம்  வீடுகளிலிருந்தே தொடங்குவோம்.

நம் தமிழர்களின் இல்லங்களிலேயே தமிழ் இல்லை என்றால் பின் சமூகத்தில் தமிழை எப்படி வளர்ப்பது? தமிழ் குடில், தமிழ் இல்லம், தமிழ் அகம் என்று நமது தமிழ்ர் இல்லங்களுக்கு தமிழில் பெயர் சூட்டிணோமே ஆனால் நாளடைவிள் கதவு டோர் ஆனது, சாளரம் ஜன்னல் ஆனது, மரப்பேழை கப்போர்ட் ஆனது இவ்வாறு  வழக்குத் தமிழ் என்ற பெயரில்,பேச்சுத் தமிழ் என்ற பெயரில், பிற மொழிச் சொற்களை தமிழில் கலபடம் செய்கிறோமே. உனவு பொருட்களில் கலப்படம் என்றல் பொங்கி எழும் நாம். நம் தாய் மொழியில் கலப்படத்தை சகித்துக் கொள்வது ஏணொ?

அன்றோ தாத்தா ,பாட்டி உடன் வளரும் பிள்ளைகள் அவர்கள் பேசும் தமிழ்  கேட்டு வளரும் போது தமிழ் ஆர்வமும் வளர்ந்தது.ஆனால்  இன்றய சூழலில் தாத்தா ,பாட்டியை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டுடோம் அதனால் தமிழையும் தவிக்க விட்டுவிட்டோம். அப்பாவை டாடி என்கிறோம், அம்மாவை மம்மி என்கிறோம் அவற்றை மாற்றி உறவுகளை தமிழில் அழைப்போம் .அப்படியே தமிழ் வளர்போம்.அழகிய தமிழ் சொற்களை விடுத்து அண்ணிய சொற்களை நாடுவது கனியிருப்ப காய்கவரும் நிலையாகும் .நமது அரசாங்கமும் தமிழ்மொழியின் பயன்பாட்டை பெருக்குவதற்க்கு பல வழிகளில் கைக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது.தமிழ் வளர்வதற்காக தமிழை வளர்பதற்காக தமிழ் மொழி மாதம், வாசிப்பை நேசிப்போம் போன்ற நிகழ்ச்சிகளேல்லாம் நமது அரசாங்கத்தால் நடத்தபடுகிறது.

சொற்களம், சொற்சிலம்பம், வசந்தம் ஸ்டார் போன்ற நிகழ்ச்சிகளில் தமிழ் பேசும் பிள்ளைகள் சமூகத்தில் தமிழை  உயர்த்த மாட்டார்களா? இளையர்களான நமக்கு தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் தலையாய கடமை உள்ளது. அதனை மனத்தில் கொண்டு,

“தமிழில்  பேசி, தமிழை சுவாசித்துத் தமிழோடு வாழ்வோம்”

 

Ref: 17-9122DS

 

 

 

6

சிங்கப்பூரில் எதிர்காலத்தில் தமிழைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

உயிரினும் மேலான எம் தாய்மொழியாம் தமிழ் மொழி மீது நீங்காப் பற்று கொண்டு இந்த மேடை பேச்சு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள சான்றோர்களுக்கு முதற்கண் என் பணிவான வணக்கங்கள்!

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழின் இனிமையை பாடினார் மகாகவி பாரதியார்.

தற்போது வரை தமிழ் பேசும் நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது சிங்கை நல்ல நிலையில் இருப்பது நமது சிங்கை அரசுக்கு நன்றி சொல்ல தூண்டுகிறது எனது மனதை!

தமிழ் மொழியை எதிர்காலத்தில் நம் சிங்கையில் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் பொழுது என் மனதில் முளைத்த விதைகளை விதைக்கிறேன் உங்கள் மத்தியில்!

“இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்”என்பதால் தமிழ்மொழியை கட்டிக்காப்பது இளைஞர்களின் முக்கிய கடமை.

“பெற்றோரே பிள்ளைகளை பிரதிபலிக்கும் கண்ணாடி”ஆகவே பெற்றோர் தமிழ் மீதான நீங்கா ஆர்வத்தை எரிகிற விளக்காக தங்கள் பிள்ளைகள் உள்ளத்தில் ஏற்ற வேண்டும்.

அதற்கு என்ன செய்யலாம்? வீட்டில் தமிழில் பேசலாம். குடும்பமாக உட்கார்ந்து தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர்களோடு கண்டுகளிக்கலாம். தமிழ் வானொலி படைப்புகளை கேட்டு மகிழ ஊக்குவிக்கலாம். அவ்வப்போது லிட்டில் இந்தியாவிற்கு பிள்ளைகளை அழைத்துச்சென்று தமிழ் கலாச்சாரத்தை எடுத்துரைக்கலாம்.

பெரியவர்களும் தானியங்கி வங்கி மற்றும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய தமிழ்ச் சேவையை உபயோகப்படுத்தலாம். அறிமுகமான தமிழ் நண்பர்கள் மட்டுமல்ல அறிமுகமில்லாத தமிழ் நண்பர்களை கண்டாலும் தமிழிலேயே பேசுங்கள்.

பள்ளியில் ஆசிரியர்களும் ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளி மாணவனும் அந்த வாரம் பார்க்கும் ஒரு தமிழ் நிகழ்ச்சியை வகுப்பில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்தலாம்.

தமிழ்மொழி மாதமாம் இந்த ஏப்ரல் மாதத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்யும் பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் மற்றும் மேடை நாடகங்கள் இவற்றில் ஒவ்வொரு மாணவனும் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும் இதற்காகவாவது மாணவர்கள் இணையத்தில் அதைப்பற்றிய தகவல்களை தேடுவார்கள் அல்லவா!

பள்ளிகளும் இத்தகைய நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க கல்விச்சுற்றுலா போன்று ஏற்பாடு செய்யலாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்!

நூலகத்தில் ஆங்கில புத்தகம் இரவல் பெறும் நம் இளைஞர்கள் வாரம் ஒரு தமிழ் புத்தகத்தை இரவல் பெறக் கூடாதா?

நம் இனிய தமிழ் நூலில் உள்ள தேன் போன்ற சிந்தனைத்துளிகளை தேடக் கூடாதா?

நம் முன்னோர்கள் கட்டிக்காத்து வளர்த்த நம் தமிழை சிங்கையில் மென்மேலும் வளர்த்து அதன் புகழை எதிர்காலத்தில் உயரச் செய்வோம்!

விதைகளை விதைத்து விட்டேன்! மரமாக வளர்த்து கனி கொடுக்க வைப்பது நம் அனைவரின் கடமை.

நாவில் தமிழ்! நாளும் தமிழ்!

வாழ்க தமிழ்! வளர்க சிங்கையில்!

நன்றி வணக்கம்.

 

Ref: 289383 AS

 

 

 

7

எதிர்காலத்தில் சிங்கப்பூரில் தமிழ் மொழியை எவ்வாறு பேணி காப்பது?

மொழிதான் முதலில் தோன்றிய தகவல் பரிமாற்று சாதனம். இது மனிதக் குலத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். உலகில் தோன்றிய ஒவ்வொரு கலாச்சாரத்தின் முதுகெலும்பு, அச்சாணி என்று வர்ணித்துக் கொண்டே போகலாம்.

வீறுடைய செம்மொழி தமிழ்மொழி !

உலகம் வேரூன்றிய நாள்முதல் உயர்மொழி !

என்று தமிழின் பெருமையைப்  பறைசாற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அப்பேர்பட்ட தமிழை ஓர் ஆட்சி மொழியாகக் கொண்ட சிங்கப்பூரில், தமிழர்கள் தமிழோடும் தமிழ்க் கலாச்சாரத்துடன் வாழ்கின்றனர்.

சரி, சிங்கப்பூரில் தமிழ் மொழியை எவ்வாறு பேணிக்காப்பது? இதை எப்படி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது? தகவல் தொழில்நுட்பம் அதிவேகமாக அடுத்த கட்டத்திற்குப் பரிணமிக்கும் இவ்வேளையில் நாம் நம் தமிழ் மொழியையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உதாரணத்திற்கு நம் வீட்டில் ஒரு செடி வளர்க்கிறோம் அந்த செடி நன்றாக வளர தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றி அதைப் பராமரிப்போம். அதுபோலத்தான் நம் மொழியின் பயன்பாட்டையும் நாம் அன்றாடம் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற பழமொழிக்கு இணங்க நாம் நம் தமிழ் மொழியின் பயன்பாட்டை அனுதினமும் பயன்படுத்த வேண்டும்.  காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த வேண்டும்.

சிங்கப்பூர் பள்ளிகளில் தாய் மொழியிலும், இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டுள்ள மாணவர்கள் தங்கள் மொழி ஆற்றலை மேலும் வளர்த்துக்கொள்ள மொழி விருப்பப் பாடத்திட்டம்  2020 ஆம் ஆண்டிலிருந்து 15 உயர்நிலைப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பண்பாட்டுக் கலைப் படைப்புகளைக் கண்டு அதன் மூலம் தமிழ் மொழியின் மீது மாணவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை மேலும் வளர்க்கும் நோக்கத்தில் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு புதிய நிதி ஆதரவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் தமிழ்ப் புத்தகங்கள் படிப்பதை வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். சிங்கப்பூரர்கள் இடையே தமிழ்ப் புத்தக வாசிப்பை அதிகரிக்கவும் ஊக்குவிக்கவும் தேசிய நூலக வாரியம் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2400 புதிய தமிழ்ப் புத்தகங்களையும் 1000 புதிய தமிழ் மின் புத்தகங்களையும் அறிமுகப்படுத்துவதோடு சிறியவர் பெரியவர் என்று அனைவருக்கும் பலவகையான வாசிப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகிறது. இதில் கலந்து கொண்டு நாம் நம் அறிவையும் தமிழ் புலமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய சூழலில் நாம் கணினியிலும் கைப்பேசியிலும் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். முகநூல் (Facebook), புலனம் (Whatsapp),  கீச்சகம் (Twitter), படவரி (Instagram) இது போன்ற பிரசித்தி பெற்ற செயலிகளில் நம் தமிழை முதன் மொழியாகத் தேர்வு செய்து தமிழ் மொழியின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில், மொழி ஆராய்ச்சியில் பிரிவுகளில், தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள மெய் நிகர் – செயற்கை நுண்ணறிவு, போன்ற பிரிவுகளிலும் தமிழை எப்படி இணைப்பது என்பதைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்து அது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உருவாக்க வேண்டும்.

சிங்கப்பூரில் தமிழ் மொழியைப் பாதுகாப்பதில் ஊடகங்களுக்கும் பங்கு உண்டு. சிங்கையின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசில் மாணவர் பகுதி என்ற பக்கத்தில் மாணவர்களுக்காகக் கவிதை, கட்டுரை, கதை எழுதும் போட்டிகளை நடத்துகிறது. அதேபோல் மீடியாகார்பின் வசந்தம் தொலைக்காட்சியும் மாணவர்களுக்காகப் பல பேச்சு மற்றும் கதை சொல்லும் போட்டிகளையும் நடத்துகிறது. இப்போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ளப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

சமூகம் மற்றும் தேசிய மன்றங்களில் நடக்கும் அனைத்து தமிழ் மொழி கலாச்சார விழாக்களிலும், வளர் தமிழ் இயக்கம் மற்றும் தமிழர் தகவல் தொழில்நுட்ப சமுதாயம் போன்ற அமைப்புகள் நடத்தும் தமிழ் நிகழ்ச்சிகளிலும் குடும்பமாகப் பங்கெடுத்து நம் தமிழ் மொழியின் அவசியத்தை இன்றைய தலைமுறை மட்டுமல்லாது நாளைய தலைமுறையும் அறிந்துகொள்ளும் வகையில் நாம் பறை சாற்றிக் கொண்டே இருப்பதன் மூலம் எதிர்காலத்தில் தமிழ் மொழியைச் சிங்கப்பூரில் நாம் பேணிக்காக்க முடியும்.

மேலும், “சாவிலும் தமிழ் படித்துச் சாகவேண்டும் எம் சாம்பலும் தமிழ் மகிழ்ந்து வேக வேண்டும்”

Ref: 198229 K

 

8

பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி

வணக்கம் என் பெயர், ஆஷிகா. எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு நாளைய தமிழ். பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி

பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி. இம்மொழி உலகில் முதலில் தோன்றி இன்று வரை தமிழர்களால் பெருமையாக பேசக்கூடிய ஒரே மொழி நம் தமிழ் மொழி. அக்காலத்தில், கிட்டத்தட்ட அனைவரும் தமிழில் மட்டுமே பேசினர். ஆனால், இன்று உலகில் 18 விழுக்காடு மக்கள் மட்டுமே தமிழில் பேசுகின்றனர். இந்த நிலமைக்கு நாம் மட்டுமே காரணமாவோம். இக்காலத்தில், மக்கள் தம்முடைய தாய்மொழியான தமிழ் தெரிந்தும் பிள்ளைகளிடமும், குடும்ப உறுப்பினர்களிடமும், நன்பர்களிடமும், ஆங்கிலத்திலையே பெரும்பாலும் பேசுகின்றனரேழொழிய தமிழில் அல்ல. நான் தமிழன் என்று பெருமையாக கூரிய காலம் போய் இன்று சிலர் தமிழனாக பிறந்ததை எண்ணி வருந்துகின்றனர். இதற்கு காரணம் நமக்கு தமிழைப் பற்றி சரியாக தெரியாததே ஆகும். தமிழில் மட்டுமே எண்ணிக்கை இல்லாத குறல்களும், பழமொழிகளும், மூதுரைகளும், வார்த்தைகளும், பாடல்களும், படங்களும் இருக்கின்றன. நம்முடைய பிறப்பிலும், மூச்சிலும், அடையாளத்திலும் இருக்கும் மொழி தமிழ் மொழி மட்டுமே. அதை வாழவைப்பது நமது கைகளில் மட்டுமே இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தமிழை நாம் எழுத்தின் மூலம் வளர்க்கலாம். சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து மொழியாக சுவையாக அமுதமாக தாயாக உயிராக தெய்வமாக தமிழ் போற்றப்படுகிறது. இத்தமிழை நாம் கவிதைகளாலும் கதைகளாலும் அக்காலத்திலிருந்து எழுதியும் மேம்படுத்தியும் வருகிரோம். இதை நாம் நிறுத்தாமல் செய்தால் மட்டுமே, நம்மால் தமிழின் ஆழத்தையும் அதன் அருமை பெருமைகளையும் அறிந்துகொள்ள முடியும். இதை அடிப்படையாகக்கொண்டு சிங்கப்பூரில் பள்ளிகளில் தமிழை மேம்படுத்தவும், அதன் அருமையை மாணவர்களுக்குக் கொண்டு செல்லவும், வரலாற்றில் இடம்பெற்ற அம்மொழியை வளர்க்கவும், தமிழில் திறமையாக எழுதவும், படிக்கவும், அதை பற்றி சிந்திக்கவும் சிறுவயதிலிருந்து கற்கின்றனர். இதை நாம் மறவாமல் பின்பற்றினால், தமிழின் பெருமை உலகெங்கும் பரவும். இதற்கு சிங்கப்பூரில் தமிழை ஒரு முக்கிய மொழியாக படிக்கும் நாம் முதலில் ஒரு அடி எடுக்கவேண்டும்.

இக்காலத்தில், அனைவருக்கும் விருப்பமான பொழுதுபோக்காக கருதப்படுவது பாடல் மற்றும் படம் ஆகும். இதை தமிழில் இயக்கம் செய்வது தமிழரிடையே தமிழின் பெருமையையும் வளர்ச்சியையும் கொண்டு செல்கிறது. இவை மனப்பாடம் செய்ய சுலபமாக இருப்பதால், தமிழை ஆழமாக அறியவும் அதன் பெருமைகளை எடுத்துரைக்கவும் உதவுகிறது. அதனால், மக்களுக்குத் தமிழின் மீது பற்று ஏற்படுகிறது. இதனால் தமிழ் வளர அதிக வாய்ப்புண்டு. இதை நினைவுட்ட சிங்கப்பூரில் தமிழ் மாதத்தின்போது அதைக் கொண்டாட தமிழில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன.

முக்கியமாக தமிழைக் காக்க நாம்  நம்முடைய தமிழர் கலாச்சாரங்களையும் வழிப்பட்டுகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவை நம் தமிழின் பெருமையை நமக்கு உணர்த்தும்.

இந்த முறைகள், நமக்கு பிறகு தமிழை அடையாளமாக கெள்ளப்போகிற அனைத்து மக்களுக்கும் தமிழின் பெருமையையும் அருமையையும் அறிந்து, அதன் மேல் பற்றுக்கொண்டு  அதை வளர்க உதவும். நம்முடைய தாய்மொழியை வளர்க்க வயதோ பணமோ தேவையில்லை. மனம் இருந்தால் போதும். நம்முடைய 5  உணர்ச்சிகளை நாம் சரியான முறையில்  பயன்படுத்தினாலேயே, நமக்கு தமிழைப் பற்றி எவ்வளவோ  புதிய விஷயங்கள் தெரியவரும். இது தமிழை நேசிக்க உதவும். ‘பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்’,

என்று கூறினார் பாரதியார். இதைப் பின்பற்றி தமிழர்களாகிய நாம் ஒன்றினைந்து, நம்முடைய முன்னோர்களைப் போல் தமிழை மேம்படுத்தி அதன் அருமை பெருமைகளை நமக்குப் பிறகு இந்த உலகில் தமிழர்களாய் கால் வைக்கும் அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம். தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்!

Ref:  058574

 

 

12

எதிர்காலத்தில் நாம் தமிழ் மொழியை எவ்வாறு பாதுகாப்பது?

உலகின் மூத்த மொழியாம் தமிழ்மொழி என்று பல அறிஞர்  பெருமக்களாலும் பல வல்லுநர்களாலும் நிருபிக்கப்பட்ட என் உயிர் அன்னை தமிழுக்கு என் வணக்கம்.

நான் பேச இருக்கும் தலைப்பு எதிர்காலத்தில் நாம் தமிழ் மொழியை எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பற்றித்தான்.மூன்று முக்கிய இடங்களில் நாம் தமிழ் மொழியை பயன்படுத்தினால் கட்டாயமாக சிறப்பாக இருக்கும் நம் மொழி.

தாய்மொழி ஒருவரின் தனிபட்ட ,சமூக மற்றும் கலாச்சார அடையாளத்தை உருவாக்குகிறது.தாய்மொழியைப் பயன்படுத்துவது ஒருவரின் விமர்சன சிந்தனை மற்றும் கல்வியறிவு திறனை வளர்க்க உதவுகிறது.நம் தமிழ் குடும்பங்களில் அனைவரும் தமிழில் தான் பேச வேண்டும் ,பேசாவிட்டால் நம் மூளை அது முக்கியமற்றது என்று நினைத்து,நம் சொந்த மொழியை தானாகவே மறந்துவிடும். நாம் தாய் மொழியை கற்பது நமக்கு மற்ற மொழிகளையும் எளிதாக கற்றுக்கொள்ள உதவும்.

இரண்டாவதாக பள்ளயில் கற்றல் முறையில் பல மாற்றங்களை கொண்டு வந்து மாணவர்களுக்கு தாய் மொழியாம் தமிழ் மொழியில் கற்கும் ஆர்வத்தைக் கொண்டு வர வேண்டும்.பள்ளியில் தமிழ் பட்டறைகளை கொண்டு வருவது மிக பயனுள்ளதாகும்.

இறுதியில் வெளி வட்டாரங்களில்,நாம் பணம் எடுக்கும் இயந்திரங்களில் மற்றும் பொது சேவையான நூலகம்,விரைவு இரயில் நிலையங்களில் இருக்கும் இயந்திரங்களில் இருக்கும் விருப்பத்தேர்வில் நம் தமிழ் மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.நம் அரசாங்கம் ஜனவரி பதிநான்ங்காம்,ஆயிரத்தி தொள்ளாயித்து ஐம்பத்தி எட்டாம் ஆண்டிலிருந்து சிங்கையில் தமிழை ஒரு அதிகாரப்பூர்வ மொழியாக அமைத்து நம் தமிழ் மொழிக்கும்,மற்றும் இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தது.

நாம் நம் தாய்மொழியை மறந்துவிடாமல் இருப்பதற்கு ஒரே வழிதான் இருக்கிறது;நீங்கள் அந்த மொழியை உயிரூட்டி அடுக்கடி பேச வேண்டும் ;உங்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் தாய்மொழியில் உரையாடுவதன் மூலமாகவோ,மொழி வகுப்புக்கு செல்வதன் மூலமாகவோ அல்லது நம் குடும்ப மூத்தோர்களுடன் அதிகம்  உரையாடுவதன் மூலம் அவர்கள் உபயோசிக்கும் தமிழ் மொழியை கற்றுக்கொண்டு  அதை நம் தினசரி வாழ்கையில் பயன்படுத்துவதன் மூலம் தமிழை பாதுகாப்பதுடன் ,வளர்க்கவும் முடியும்.

இது போன்று பல வழிகளில் நாம் கடைபிடித்தால் எதிர்காலத்திலும் சிறப்பாக இருக்கும் நம் தாய்மொழி.வாழ்க தமிழ் .

Ref: X148912

 

 

 

14  

இன்றைய தமிழ்

என் பெயர் லிவிஸ்ரி. நான் இன்று உங்களுடன் நாளைய தமிழைப் பற்றிப் பேசப்போகிறேன். இத்தளைப்பைப் பற்றி பேசுவதற்கு முன்பு இன்றைய தமிழ் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

இன்றைய சூழலில் தமிழைப் பேசுபவர்கள் அதிகம் இல்லை. ஏனென்றால், குறைந்த அளவு மக்கள் மட்டுமே தூய தமிழில் பேசுகிறார்கள். இது சோகமான உண்மை. வீடுகளில், பெற்றோர்களும் குழந்தைகளும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகிறார்கள். இதன் காரணமாக, குழந்தைகளுக்கு சரியாக தமிழ் பேசத் தெரியவில்லை.இதனால், அவர்கள் கேலி செய்யப்படுவார்கள் என்று பயந்து தங்கள் நண்பர்களுக்கு முன்னால் தமிழில் பேச வெட்கப்படுகிறார்கள்.

இதன் காரணமாக, தமிழில் பேசும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது தொடர்ந்தால், அடுத்த தலைமுறையினர் தமிழ் என்றால் என்ன என்று கேட்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதை நாம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, அது நம் மூச்சு. தமிழர்களாகிய நாம் தமிழில் பேசவில்லை என்றால், யார் பேசுவார்கள்? ஆகவே, தமிழர்கள் ஆகிய நாம் கண்டிப்பாக தமிழில் பேச வேண்டும்.

“ஒவ்வொரு தாக்கத்திற்கும் பின்னால் மகிழ்ச்சி இருக்கிறது” என்ற கருத்திற்கினங்க அடுத்த தலைமுறை தமிழை சிறப்பாக பேசவும்  படிக்கவும் , எழுதவும்  செய்வார்கள் என்று நம்புவோம்.

 

நாம் நம்பினால் மட்டும் போதாது, ஒவ்வொருவரும் தங்களது பங்கை ஆற்றவேண்டும்

நாம் முதலில் செய்ய வேண்டியது, நமக்குத் தெரிந்தவர்களுக்கு தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவேண்டும். ‘வேறு யாரும் தமிழ் பேசாததால் ஏன் தமிழ் பேச வேண்டும்’ என்று பல தமிழர்கள் கேட்கிறார்கள். பேசுவதன் முக்கியத்துவத்தை இந்த நபர்களிடம் நாம் எடுத்துரைக்கவேண்டும்.

மேலும், அவர்கள் தமிழ் பேசுவதற்கு நீங்களே முதலில் தமிழில் பேச ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் தமிழில் பேசவில்லை என்றால் அவர்கள் தமிழில் பேசுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவே, தமிழின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு தெரிவிப்பதும், முதலில் தமிழில் பேசுவதும் அனைவருக்கும் பெரிதும் பயனளிக்கும்.

தமிழ் பற்றிய நமது அறிவை அதிகரிக்க மற்றொரு வழி, புத்தகங்களைப் படிப்பது ஒரு சிறந்த வழிறையாகும். தமிழ் புத்தகங்கள் வாசகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, மேலும் வாசகர்கள் தமிழ் புத்தகத்தைப் படித்து மகிழ்கின்றன. எனவே, வாசகர் மேலும் தமிழ் புத்தகங்களைப் படிக்கத் தொடங்குவார். தமிழ் புத்தகங்களில் வாசகர்கள் தங்கள் சொற்களஞ்சியத்தை மேம்படுத்தி நிறைய புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளலாம். எனவே, தமிழ் புத்தகங்களைப் படிப்பது ஒரு நபரின் தமிழ் அறிவை உயர்த்துவதற்கான சிறந்த வழியாகும்.

மாணவர்களுக்கு விடுமுறையின்போது, ​​பெற்றோர்கள் அவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லலாம், அங்கு அவர்கள் தமிழில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, அவர்களின் தமிழ் புலமை தானாகவே அதிகரிக்கும்.

 

இந்த வழிகளை நாம் பின்பற்றினால், நாளைய தமிழைக் காப்பாற்றி அடுத்த தலைமுறை தமிழில் சிறப்பாகச் செய்வதற்கு நாமும் ஓர் அடித்தளமாக இருப்போம். தமிழை ஒரு சுமையாக பார்க்காமல், மகிழ்ச்சியாக நினைப்போம்.

இனி வரும் காலங்களில், நீங்கள் எனது பரிந்துரைகளைப் பின்பற்றி தமிழை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ் !!!

Ref: 158319TL

15

தமழ்மொழயைப் பேணிக் காப்பது.

காலத்தால் அழியாத ஒரே மொழி நம் தமிழ் மொழி ஆகும். சிங்கப்பூரில் நான்கு தேசிய மொழிகள் உண்டு. அவற்றில் நம் தமிழ் மொழி தனித்தன்மை பெற்றது. ஏனென்றால், பிற மொழிகளெல்லாம் மற்றவர்களுடன் தொடர்புகொற்ற மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நம் தமிழ்மொழி மற்றவர்களுடன் பந்தம் உருவாக்கும் திறன் பெற்றது. தமிழின் அழகைச் சொற்களால் வரனிக்க முடியாது. இப்படிப்பட்ட சிறப்பகளை வாய்ந்த தமழ்மொழயைப் பேணிக் காப்பது சிங்கப்பரிலுள்ள தமிழர்களாகிய நம்முடைய கடமை.

சிங்கப்பூரில் பல நாடுகளில் இருந்து வந்த மக்கள் குடியிருக்கிறார்கள்.

பல விதமான மொழிகளில் அவர்கள் பேசுவார்கள். ஆகையால், மொழிகள் இனைகின்றன. தமிழர்கள் தமிழில் பேசும்போது பிற மொழிகளிலுள்ள சொற்களைச் சேர்த்து பேசுகின்றனர். இதனால், தமிழின் தனித்தன்மை இழக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க நாம் முடிந்த அளவு  தூய தமிழில் பேச

வேண்டும் என்று பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இவ்வாறு செய்தால், மாணவர்கள் சிறு வயதிலேயே அந்த பழக்கத்தை கடைப்பிடிப்பார்கள்.

தகவல் தொழில்நுட்பத்தின் அசுரவளர்ச்சி குறிப்படிடத்தக்கது.

உலக மக்கள் தொகையில் பாதி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சிங்கப்பூரில் என்பது சதவீத மக்களுக்கு மேல் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையத்தில் தமிழ்மொழியின் அருைம பெருமைகைளப் பாராட்டி பல செய்தி துணதக்குகள் உள்ளன. இவை தமிழர்களுக்குத் தமிழை காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும். ஏனென்றால், நாம் தமிழ்மொழிையப் பற்றி அறியாத பல விஷயங்களை அறியலாம். உதாரணத்திற்கு, சென்ற வாரம் முகநூலில் ஒரு செய்தி துணுக்கு படித்தேன். அதிலருந்து தமிழ் பல்ஆயிரம் ஆண்டுகளாக கம்பீரமாக நிலைத்துக்கொண்டு இருக்கிறது என்று நான் கற்றுக் கொண்டேன். இது என்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்பட வைத்தது. ஆகவே, நாம இணையத்தில் தமிழ்மொழியைப் பற்றி நிறை செய்தி துணுக்குகளைப் படடிக்கலாம்.

இன்றைய இளைஞர்களுக்கு ஆங்கில புத்தகங்கள் படிக்க பிடிக்கும். அவர்கள் தமிழ்  புத்தகங்கள் படிக்க விரும்ப மாட்டார்கள். தமிழ்  புத்தகங்களைப் படிக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்களால் தமிழ் மோழியின் அழகை ரசிக்க முடியும். மேலும், அவர்களுடைய தமிழ் புலமை வளரும். ஆகையால், தமிழைக் காக்க இளைஞர்களைத்  தமிழ்  புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்க வேண்டும்.

நாளை சிங்கப்பூரில் நமது தமிழ்மோழி கம்பீரமாக நிலைத்து நற்கட்டும்.

Ref: 399010SP

 

 

 

16

எதிர்காலத்தில் (சிங்கப்பூரில்) தமிழ் மொழியை எவ்வாறு பாதுகாப்பது!

என் தாய் மொழியாம் செம்மொழியான தமிழ் அன்னைக்கு என் முதல் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என் பெயர் ஆதவன்.

சிங்கப்பூரில் இறைய தமிழர்களிடையே தமிழில் பேசும் ஆர்வம் குறைந்துக் கொண்டே இருக்கிறது. இதனால் தமிழ் மொழியை அடுத்த தலைமுறை மறக்கும் அவநிலை ஏற்படலாம். இதை தவிர்க சிங்கப்பூரில் நாம் தமிழ் மொழியை எதிர்காலத்தில் வவ்வாறு பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி எடுத்துரைக்க போகிறேன்

பகுத்துண்டு பல் உயிர் ஓம்புதல் என்ற உயரிய பண்பு கொண்ட தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட ஒவ்வொரு தமிழர்களும்  தங்கள் பிள்ளைகளுக்கு தமிழிலேயே பெயர் சூட்ட வேண்டும். தங்கள் பெயரின் பொருளைத் தெரிவித்து தான்  ஒரு தமிழன் என்ற அடையாளத்தை ஆழமாக விதைக்கும் போது வேரூண்றி மொழி சிறக்க இதுவழிவகுக்கும்.

சிங்கையில் வாழும் தமிழர்கள், தாங்கள் பிள்ளைகளுடன் குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழில் பேசி பழக வேண்டும். இளம் பருவத்தில் தங்கள் மொழியில் பேசி பழகினால் அது சிலைமேல் வடித்த எழுத்தாக ஆழமாக அவர்கள் மனதில் எளிதில் பதிந்துவிடும். ஆங்கிலம் தவிர்த்து இயன்றவரை அனைத்துப் பொருட் பெயர்களையும் தமிழில் கற்பித்தால் மாணவப்பருவத்தில் அவர்கள் தமிழ் மொழியை பயிலும் பொழுது தமிழ் அவர்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும். இதனால் தமிழை ஆர்வத்துடன் அவர்கள் படிப்பார்கள்.

பள்ளியில் தமிழ் பாட வேளையில் மட்டுமே தமிழில் பேசாமல் தங்களோடு பயிலும் தமிழ் மாணவர்களுடன் மற்ற நேரங்களிலும் தமிழில் பேசி பழகுவதாலும் குடியிருப்பு பேட்டையின் அருகில் வசிக்கும் தமிழர்களுடன் தமிழில் பேசி பழகுவதாலும் தமிழ் மொழி பேச்சு வழக்கில் என்றும் நிலைத்திருக்கும்.

பல மாணவர்களுக்கு உயர்நிலையிலேயே தமிழ் பாடம் நிறைவடைவதால் அவர்கள் தமிழை மறந்து விட அதிக வாய்ப்புகள் உண்டு. இதைத் தவிர்க்க மாணவர்கள் சமூக மன்றங்களில் இந்திய செயற்குழு நடத்தும் பேச்சு போட்டிகளிலும் வளர்தமிழ் இயக்கம் நடத்தும் தமிழ் சார்ந்த போட்டிகளிலும் பங்கு பெற வேண்டும். இது மாணவர்களின் மொழி வளத்தை அதிகரிப்பதில் உதவுவது மட்டுமல்லாமல் இந்த சமுதாயத்தில் தமிழை சிறக்க செய்யும். சிங்கை அரசு ஏப்ரல் மாதத்தில் தமிழ்மொழி மாதமாகவே கொண்டாடுகிறது. அப்பொழுது தீவு முழுவதும் தமிழ் சார்ந்த பல்வேறு போட்டிகளும் பட்டிமன்றங்களும் தமிழ் பண்பாட்டை சார்ந்த நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கெடுக்கும் பொழுது அடுத்த தலைமுறையினர் தமிழில் பேச இது ஊக்குவிப்பாக அமையும்.

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் இணைய உயிர்மெய் எழுத்துக்கள் மற்றும் வான் புகழ் பெற்ற திருக்குறள் போன்ற தமிழுக்கு இருக்கும் தனி சிறப்புகளையும் தமிழ்மொழியின் வரலாற்றையும் நாம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டும்.இதனால் அடுத்த தலைமுறையினர்கள் தமிழின் சிறப்புகள் என்றும் நிலைத்திருக்க தமிழில் பேச முடிவெடுத்து தமிழிலேயே பேசுவார்கள்.

சிங்கப்பூரின் ஒவ்வொரு குடியிருப்பு பேட்டையிலும் பொது நூலகம் இருப்பதால், தமிழ் மாணவர்கள் பொது நூலகத்திற்கு சென்று தமிழ் புத்தகங்களை இரவல் பெற்று படிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த கதைகளுக்கு வசனம் எழுதி சக மாணவர்களுடன் அவற்றை நாடகமாக தங்கள் பெற்றோர்களுக்கு படைக்கலாம். இவற்றை செய்வதால் மொழி வளம், கற்பனை திறன் ஆகியவை அதிகரிப்பதுடன் தாய்மொழியாம் தமிழில் பேசும் ஆற்றல் அவர்களுக்கு வளர்கிறது. இது அவர்களையும் அவர்களின் நண்பர்களையும் தமிழில் பேசிப் பழக ஊக்குவிக்கும்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதானது எங்கும் காணோம்” என்று பாரதியாரே தமிழ் மொழியை போற்றியுள்ளார். அந்த இனிய தமிழ்மொழி கட்டி காப்பது நம் கடமையாகும். வாழ்க செம்மொழி வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! நன்றி வணக்கம்.

Ref: 228806AA

 

 

 

18

எதிர்காலத்தில் (சிங்கப்பூரில்) தமிழ் மொழியை எவ்வாறு பாதுகாப்பது

தமிழ்மொழியை பாதுகாக்க முதலில் ஒவ்வொரு தமிழனும் தமிழின் பெருமையை அறிந்து கர்வம் கொள்ளும் வண்ணம் செய்திடல் வேண்டும்.

“தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா”

என்பதெல்லாம் வெற்று வார்த்தைகளாக நின்று விடாமல் நம் நாடி நரம்பு அனைத்திலும் தமிழன் என்ற உணர்வு தலைதூக்கி நிற்கும்படி செய்திடல் வேண்டும். தமிழ் வெறும் ஒரு மொழியல்ல , அது ஒரு கலாச்சாரம், ஓர் உணர்வு, ஒரு வாழ்வுமுறை என அடுக்கிக்கொண்டே செல்லலாம். தமிழின் பெருமைகளை அணிவகுத்தால் ஒரு காப்பியமே இயற்றலாம் . அவற்றில் சிலவற்றை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். தமிழனின் வீரத்திற்கு சான்றாக அங்கோர்வாட் கோவில் இன்றும் நம் கண்முன்னே நிற்கிறது. தஞ்சை பெரிய கோயிலோ தமிழனின் கட்டிட கலைக்கும் ஆழ்ந்த அறிவியல் ஞானத்திற்கும் சான்றனறோ!

எத்தனையோ அந்நிய படையெடுப்புகளையும் தாண்டி நிலைத்து நிற்கும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயமும், மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆலயமும் தமிழர்களின் பக்திக்கு சான்றாக உள்ளது . மாமல்லபுரத்திலுள்ள குடைவரைக்கோயில் தமிழனின் சிற்பக்கலைக்கு ஒரு சான்றன்றோ! இதனை எல்லாம் தெரிந்து கொள்ளும் எவருக்கும் நம் தாய்மொழியாம் தமிழின் மீது ஒரு விதமான கர்வம் ஏற்படும் என்பது திண்ணம். அதுவே நம் செம்மொழியாம் தமிழ்மொழியின் அன்றாட வாழ்வியல் பயன்பாட்டை ஆணிவேரிலிந்து அதிகரிக்க செய்யும் ஆக்கசக்தியாகும்.

தமிழ்மொழியின் ஆர்வத்தை தூண்டும் விதமாக பல சொற்பொழிவுகளும் பட்டறைகளை கருத்தரங்குகளும் நடத்த வேண்டும். நிகழ்ச்சிகளின் தலைப்புகளும் விவாதிக்கப்படும் கருத்துகளும் இளைஞரகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணமும்இருத்தல் அவசியம். அத்துடன் பள்ளிகளிலும் மாணவர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளை அறிந்துகொள்ளுதல் தமிழின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்

அண்மையில் நம் கல்வியமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கிய விருப்ப பாடத்திட்டம் சிங்கப்பூரின் தமிழ் மொழி வளர்ச்சி பாதையின் ஒரு முக்கிய மைல்கல்லாகும். மூன்று பள்ளிகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இப்பாடத்திட்டமானது அனைத்து தமிழ்மொழி மாணவர்களுக்கும் எளிதில் கிடைத்திடும் வண்ணம் மற்ற பள்ளிகளுக்கும் காலப்போக்கில் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

வாய்ப்பை விரிவுபடுத்துவதுடன் ஆர்வத்தையும் தூண்ட வேண்டும். நான் பயிலும் ரிவரசைட் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டிருக்கும் தமிழ்மொழிகழகம் இந்த சீரீய பணியை சீரும் சிறப்புமாக செய்து வருவதாக உணர்கிறேன். இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் கொண்டாடும் அதே நேரத்தில் இன்றைய இளைஞர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக மானவ்ரகளின் படைப்புகளை தரமிக்க காணொளிகளாக பதிவு செய்து மெய்நிகற்தளங்களில் பதிவேற்றம் செய்கிறோம். இச்செயல்பாடுகள் அனைத்தையும் மாணவர்களாகிய நாங்களே செய்வதால் நல்ல தமிழைக்கற்றுக்கொள்வதுடன் இந்த உலக மேடையில் வெளியுலகின் பார்வை நம் மீது படுவதற்கு இக்கழகம் ஒரு பாதை அமைத்து கொடுப்பதால் பலரும் பங்குகொள்கின்றனர். இளைஞர்களை கவரும் இத்தகைய புதிய முயற்சிகளை மேற்கொண்டால் நாளைய தமிழ் பாதுகாக்கப்படும் என்பதில் ஐயமுண்டோ.

பன்னிரண்டு உயிரெழுத்துக்கள் பதினெட்டு மெய்யெழுத்துக்கள் என்ற முப்பதே ஒலிகளுக்குள் உலகத்தில் உள்ள அனைத்தையும் தன்னகத்தே அடக்கி ஆளும் மொழியாக திகழும் தமிழின் தனிச்சிறப்பை சீர்தூக்கி சிங்கையில் தமிழை பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வோம். வாய்ப்பு கொடுத்தமைக்கு நந்தி பாராட்டி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்!

Ref: 299839SP

 

 

 

 

19

எதிர்காலத்தில் சிங்கையில் தமிழ்மொழியை எவ்வாறு பாதுகாப்பது

உயிர் நாவில் உருவான உலகமொழி, நம்செம்மொழியான தமிழ்மொழிக்கு  வணக்கம் !!

தமிழர்கள் இன்று உலகெங்கிலும் வாழ்கின்றனர். ஆனால் சில நாடுகளில்  தான்  தமிழர்கள், தமிழோடும்,தமிழ் கலாச்சாரத்துடனும் வாழ்கின்றனர் ,  அப்படிகுறிப்பிட்டுச் சொல்லும் படியான நாடுகளில்சிங்கப்பூரும்  ஒன்று.  சிங்கப்பூரில் மூன்றில் ஒரு பங்குதமிழர்கள் இருப்பதால், நம் அரசாங்கம் தமிழ்மொழியை அதிகாரத்துவ மொழிகளுல்  ஒன்றாகஇணைத்துள்ளது.  சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழ் பாடம்முதல் மொழியாகவும், இரண்டாம் மொழியாகவும்கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்படிபட்ட தமிழ்மொழிநாம் அன்றாடம்  புழங்கும் சூழல்களில் இருந்தும்சிங்கையில் தமிழ்மொழி புழக்கம் நாளுக்கு நாள்மறைந்து  கொண்டே வருகிறது.

“யாமறிந்த மொழிகளிலேயே தமிழ்மொழி போல்இனியாவது எங்கும்  காணோம்” , என்று மகாகவிபாரதியார் கூறியுள்ளார். இருப்பினும்,  இக்காலக்கட்ட இளையவர்கள் தமிழ் பேச வெட்கப்பட்டு, ‘ எனக்குதமிழ் தெரியாது ‘ என்று புளங்காகிதம்அடைகிறார்கள்.

சிலரோ வாழும் மொழியான தமிழை இழிவாகநினைக்கிறார்கள். மேற்கத்திய கலாசாரசெல்வாக்கினால் நம் சந்ததியினர் தமிழ்மொழியைவரலாற்று  புத்தகங்களில் தான் படிப்பார்கள்.

சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுக்குதமிழ்மொழி ஓர் அடையாளம் ஆகும். உலகமயமாகிவரும் சூழலில் மொழிகளின் மீதுள்ளஆர்வத்தை  இளையவர்களிடம் ஏற்படுத்துவதுசவாலான ஒன்று.

இவற்றையெல்லாம் தவிர்க்க தமிழர்கள் தங்கள்வீட்டில் அன்றாடம் தமிழ்  பேசும் பழக்கத்தைஆரம்பிக்க வேண்டும்.

பெற்றோர்கள் தமிழில்பேசினால், அவர்களுக்கு பதில் கூற பிள்ளைகளும் தமிழில் பேச முயற்சி செய்தாவது பேசுவார்கள். இந்தபழக்கம் சிறுவர்களை  தமிழில் பேச பயிற்சி செய்யும் . மேலும் சிறுவர்களை தம் நண்பர்களிடமும்  தமிழில்பேச தூண்டும்.

பிறகு , தமிழ் பாடத்தின் போது ஆசிரியர்கள்மாணவர்களுக்கு பல  நடவடிக்கைகள் மூலம்பாடத்தை நடத்தினால் மாணவர்களுக்கு எளிதில்புரியும். நான்கு  அதிகாரத்துவ மொழிகள் கொண்ட நம்சிங்கையில் நாட்டில்,  ஆசிரியர்கள் தமிழ்மொழியைமாணவர்களுக்குக் கற்பிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றனர் என்றே கூறலாம்.

சிங்கப்பூரில் தமிழை மேலும் வளர்க்கவும் தமிழைமக்களிடத்தில் வாழ்வியல் சார்ந்த மொழியாகஆக்கும் நோக்கிலும், குறிப்பாக இளையவர்கள் அரசாங்கத்துடன் சமூக அமைப்புகளுடன் ,  தங்கள் உறவை வலுப்படுத்தவும் தமிழ்மொழி விழா என்னும்அமைப்பு தொடங்கப் பட்டது.

2007 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் இவ்வமைப்பின்ஆதரவோடு,  ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும்தமிழ்மொழி விழா கொண்டாடப்பட்டு  வருகிறது.  இந்த விழாவில் இளையர்கள் பலர் கலந்துக்கொள்வதால் தங்களுடைய  தமிழ் பாடங்களில் சிறப்பாகவும் பற்றோடும் செய்கிறார்கள்.

மேலும் பலர் இதில் கலந்து கொண்டால் அவர்கள் தமிழன் என்று பெயரெடுப்பதில் பெருமையுடனும் உருதியுடனம்இருப்பார்கள்.

சிங்கப்பூரில் தமிழாசிரியர்கள் ஒரு கையளவு மக்கள்உள்ளனர், நாம் நம் இளையர்களை தமிழ் ஆசிரியராகபணிப்புரிய தூண்ட வேண்டும்.  மேலும்  மூத்தகுடியிருப்பினர்களுக்கு நம் இளையசமுதாயத்தினர், சமூக மன்றங்களில்  இணையத்தைஎப்படி பயன்படுத்துவது என்று பல வகுப்புகளை நடத்தலாம்.

இதனால் அவர்களுக்கு சுலபமாக புரியும்.  மேலும் அவர்களுடைய ஆர்வத்தை அதிகரிக்கும்.  இவ்வாறே நாம் சிங்கப்பூரில் தமிழை காப்பாற்றளாம்.

Ref: 098524KH

 

 

25

என் பெயர் ஹனிஷ். நான் புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை மூன்றில் படிக்கிறேன். “தித்திக்கும் தேன் தமிழ் திக்கெட்டும் பரவட்டும்” முத்தமிழ் தாய்க்கு என் முதற்கண் வணக்கங்கள். இனி தலைப்பிற்குள் செல்கிறேன்.. காதுகளை தாருங்கள். நான் இன்று பேசவிருக்கும் தலைப்பு, “சிங்கப்பூரில் தமிழை எவ்வாறு பாதுகாக்கலாம்?”. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ்மொழி” எனும் சிறப்பு பெற்றது நம் தமிழ் மொழிதான். உலகிலேயே பழமையான மொழி நம் தமிழ் மொழி.

நம் தமிழ் மொழியில் இருக்கும் எழுத்துக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். நம் தமிழ் மொழியின் சிறப்புகளை பற்றி பேச வேண்டுமானால் பேசிக்கொண்டே போகலாம். தமிழ் மொழியின் இலக்கியங்கள் காப்பியங்கள் மற்றும் கதைகள் போன்றவை உலகில் வேறு எங்கும் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழி அழிந்து போகும் நிலையில் தான் இருக்கின்றது. ஏனெனில், இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தமிழில் பேச மறுக்கிறார்கள். மேலும் அவர்களிடையே ஆங்கிலத்தில் உரையாடும் மோகம்தான் அதிகரித்து வருகிறது. அந்த அளவிற்கு ஆங்கிலம் அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. பல மாணவர்கள் பொது இடங்களில் தமிழில் உரையாட வெட்கப்படுகிறார்கள். இப்படி அனைத்து தமிழ் மாணவர்களும் மற்றும் இளைஞர்களும் தமிழில் உரையாடாமல் இருந்தால் சிங்கப்பூரில் தமிழ் அழிந்துவிடும். இதை தடுக்க பல வழிகள் இருக்கின்றன. முதலில் பெற்றோர்கள் வீட்டில் தங்கள் பிள்ளைகளிடம் தமிழில் உரையாடினால் தான் அவர்கள் வெளியே தமிழில் பேசுவார்கள். இதை நாம் முதலில் கட்டாயமாக்க வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்களுடன் தமிழரின் வரலாறு பற்றி கதைகள் மற்றும் காப்பியங்கள் மூலம் கூற வேண்டும். திருக்குறள், ஆத்திச்சூடி போன்ற பெரும் நூல்களைப் பற்றி பேச வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு தமிழின் மீதான ஆர்வமும் பற்றும் பெருகும். மேலும் மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்திலும் தமிழை கற்க பல வளங்கள் உள்ளன. ஆனால் அதைக் கற்க அவர்களுக்கு தமிழ் மீதான ஆர்வத்தை முதலில் உருவாக்க வேண்டும். மாணவர்கள் எவ்வாறு இணையத்தில் கணினியில் விளையாடுகிறார்களோ அதேபோலத்தான் தமிழ் கற்கவும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் ஆர்வத்துடன் தமிழைக் கற்க யூடியூப் போன்ற வலைத்தளத்தில் உள்ள காணொளியை காணலாம்.

தமிழைப் பற்றிய கதைகள், திருக்குறள், ஆத்திச்சூடி, தெனாலிராமன் மற்றும் ஐம்பெரும் காப்பியங்கள் பற்றிய காணொளிகள் ஏராளமாக இணையத்தில்  உள்ளன. அவர்கள் தங்கள் நண்பர்களிடமும் அந்த கதையை பற்றி உரையாட வேண்டும். அவ்வாறு உரையாடும்போது அவர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் மிகவும் அதிகரிக்கும். அதுமட்டுமன்றி பாரதியார், திருவள்ளுவர் போன்ற ஆன்றோர் எழுதிய நூல்களைப் படித்து அதிலுள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டால், அது தமிழின் சிறப்பை அவர்கள் மேலும் அறிந்து கொள்ள உதவும்.

நாம் தமிழை திரைப்படப் பாடல்கள் மூலமும் கற்றுக்கொள்ளலாம். இன்றைய பாடல்களை நான் குறிப்பிடவில்லை. நான் அன்றைய பாடல்களாகிய “திருடாதே…பாப்பா திருடாதே…” மற்றும் “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது” போன்ற பல பாடல்கள் மிகவும் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது. முக்கியமாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் ஆகியோர் எழுதிய பாடல்கள் மிகவும் சிறப்பானவை. இவையெல்லாம் மாணவர்கள் கற்றால், அது தமிழ் வளத்தை பெருக்கி தமிழ் தேர்வுகளிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுக்க உதவும்.

தமிழை பாதுகாக்க வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது தமிழில் பேச வேண்டும்.  மாணவர்களிடையே தமிழை புகுத்தி, வளர்த்தி, தமிழ் மீது பற்று உண்டாக செய்வது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். ஆதலால் அனைவரும் “தமிழை நேசிப்போம்; தமிழில் பேசுவோம்” நன்றி வணக்கம்.

Ref: 25-459390H

 

 

 

29

தித்திக்கும் தேன் தமிழ் திக்கெட்டும் பரவட்டும். செம்மொழியான தமிழிற்கும் மதிப்பிற்குரிய நடுவர்களுக்கும் என் முதற்கண் வணக்கங்கள். நான் இன்று எதிர்காலத்தில் சிங்கப்பூரில் நம் தமிழ் மொழியை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற தலைப்பையொட்டி பேச போகிறேன்.

வல்லரசு நாடுகளிலிருந்து குக்கிராமங்கள் வரைப் பரவலாக பேசப்படும் மொழி நம் தாய் மொழியான தமிழ் மொழி தான். ஆனால் பழமையும் சிறப்பும் மிக்க தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகின்றது. ஒரு நாட்டில், அதாவது சிங்கப்பூரில் தமிழைக் கட்டிக் காக்க வேண்டுமென்றால் அதற்கு முக்கியமாக அந்நாட்டில் நான்கு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசாங்கம், பள்ளிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களாகிய நாங்கள்.

இப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களில் மாபெரும் பங்கை ஆற்ற வேண்டியவர்கள் இளைஞர்கள் தான். நெல்சன் மண்டேலா கூறியதைப் போலவே ‘இன்றைய இளையர்கள் தான் நாளைய தலைவர்கள்’. இத்தலைமுறையின் இளைஞர்கள் தமிழின் சிறப்பை உணர்ந்து நடந்தால் தான் அடுத்த தலைமுறையினரும் அவர்களைப் பின்பற்றி தமிழைப் போற்றுவார்கள். ஆனால் அதில் ஒரு பிரச்சனை. இக்கால இளையர்களில் பெரும்பாலோர் தமிழின் சிறப்பை உணர்வதில்லை.தாய்மொழி தமிழ் மொழியாக இருக்கும்போதிலும் அவர்கள் அதைப் போற்றும் வகையில் நடந்துகொள்வதில்லை.வீட்டிலிருந்து பள்ளி வரை அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை தான் விரும்புகிறார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் பேசாவிட்டால் அவர்களுடைய நண்பர்கள் அவர்களைப் பற்றி தாழ்வாக எண்ணிவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். ஆங்கிலத்தில் பேசினால்தான் அவர்களுடைய கெளரவம் அதிகரிக்கும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் ஒன்றை உணர மறந்துவிடுகிறார்கள். பழமையான தமிழை மதிக்காமல் அதனைப் பற்றி தாழ்வாக எண்ணுவது அவர்கள் தங்களையே ஏளனப்படுத்திக்கொள்வதற்குச் சமமாகும். அதனால் இளையர்கள் இப்போதிலிருந்தே தமிழை மதித்து அதனுடைய சிறப்பை உணர்ந்து நடக்க வேண்டும்.

ஆனால் இளையர்கள் அவ்வாறு செய்வதற்கு அவர்களுடைய தனி உழைப்பு மட்டும் போதாது.இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களும் ‘தமிழ் எங்கள் பேச்சு அதுவே எங்கள் மூச்சு’ என்பதற்கேற்ப தமிழின் சிறப்பை உணர்த்தி அவர்களுக்குத் தமிழ் பற்றை ஏற்படுத்த வேண்டும். இக்கால இளையர்கள் தமிழில் பேசுவதற்கு தயக்கமடைவதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஏதேனும் ஒரு சில வார்த்தைகளைத் தவறாக உச்சரித்துவிட்டால் மற்றவர்கள் அவர்களைக் கேலிச் செய்வார்கள் அல்லது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தான். உதாரணத்திற்கு என் அத்தை என் வீட்டிற்கு வரும் போது நான் அவரிடம் வாங்க அத்தை என்பதற்குப் பதிலாக வாங்க அட்டை என்று அழைத்தால் அந்த வார்த்தையின் அர்த்தம் மாறிவிடுகிறது. இதனால் மற்றவர்கள், குறிப்பாக என் குடும்பத்தினர்கள் என்னைக் கேலிச் செய்வார்கள். இவ்வாறு நேர்ந்தால் பொதுவாகவே தமிழ் பேசுவதற்கு தயங்கும் இளையர்கள் மேலும் ஊக்கமின்றி தமிழை வெறுக்க தொடங்குவார்கள். ஆனால் அதற்கு பதிலாக குடும்பத்தினர்கள் பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக் காட்டி அன்பான மற்றும் சுவாரசியமான முறையில் உதாரணத்திற்கு நகைச்சுவையான முறையில் அவர்களின் தவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டும். மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குத் தமிழ் சார்ந்த புகழ்பெற்ற கவிதைகள் ஆத்திச்சுடிகள் போன்றவற்றை சிறு வயதிலிருந்தே அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். அதே சமயத்தில் பெற்றோரும் அதிக நேரம் வீட்டில் அவர்களுடைய பிள்ளைகளிடம் தமிழில் மட்டுமே பேசுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம் இன்றைய உலகில் தமிழ் வகுப்பில் கூட ஆங்கிலம் பேசும் மாணவர்கள் தான் அதிகம் உள்ளனர். அதனால் ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’ என்பதற்கேற்ப பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் தமிழின் சிறப்புகளை உணர்த்தி அவர்களிடம் தமிழ் பற்றை உண்டாக்க வேண்டும்.

இத்தனை வேலைகளையும் பெற்றோர்களே செய்து முடித்த பின் ஆசிரியர்களுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த வேலையும் இல்லை என்று எண்ணிவிடக் கூடாது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதோடு தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கற்றுத்தருவதும் ஆசிரியர்களின் கைகளில் தான் உள்ளது. இயல், இசை , நாடகம் என்ற முத்தமிழையும் ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை மாணவர்கள் ஆர்வத்தோடு கற்றுக்கொள்வதற்கு போட்டிகள் போன்றவற்றை ஏற்பாடுச் செய்யலாம். அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் தமிழ் வகுப்பில் ஆங்கிலம் மட்டுமே பேச விரும்பும் மாணவர்களுக்கு அறிவுரைக் கூறி அவர்களைத் தமிழில் பேச ஊக்குவிக்கலாம். உதாரணத்திற்கு மாணவர்களைச் சிறு சிறு கதைப் பத்திகளைப் படித்து பார்க்க முயற்சி செய்ய சொல்லலாம். அவர்களின் தவறுகளையும் அன்பாகத் திருத்தலாம். ஆசிரியர்களே இவ்வளவு செய்யும் போது அவர்கள் சொல்வதை மதித்து தவற்றைத் திருத்திக்கொள்வதும் திருத்திக்கொள்ளாததும் மாணவர்களின் கைகளில் தான் உள்ளது. தமிழைப் பாதுகாக்க வேண்டுமென்றால் மாணவர்கள் கூச்சமின்றி தமிழில் பேச முயற்சி செய்வது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

அதுமட்டுமின்றி இப்போது ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. ஏப்ரல் மாதம் என்றாலே சிங்கப்பூரில் தமிழ் மொழி விழாவின் கொண்டாட்டம் களைக்கட்ட தான் செய்யும். ஆனால் இந்த வருடமோ தவிர்க்க முடியாத இக்கோரோனாச் சூழலால் இவ்வருடம் அவ்வளவுக் கோலாகலமாக கொண்டாட முடியாமல் போய்விட்டது. ஆனால் அவ்வாறு இருக்கும் போதிலும் நம் சிங்கப்பூர் அரசாங்கம் தமிழ் மொழி விழாவை ஒதுக்காமல் மேலும் தமிழிற்குப் பெருமைச் சேர்க்கும் வகையில் இணையத்திலிருந்தே தமிழ் மொழி விழாவின் கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றது. பட்டறைகள், போட்டிகள்,கலைநிகழ்ச்சிகள் என பலவற்றை நாம் இணையத்திலிருந்தேக் கண்டு ரசிக்கலாம்.இவ்வளவையும் நம் அரசாங்கம் தமிழிற்காகச் செய்வதற்குக் காரணம் தமிழ்மொழி நம் நாட்டின் நான்கு அரசு மொழிகளில் ஒன்று. இம்மொழியை நாம் பயன்படுத்தாவிட்டால் நம்மில் அதிகம் பேர் பேசாவிட்டால் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து தமிழ்மொழி எதிர்காலத்தில் அரசு மொழியாக நீடிக்காமல் போய்விடும். இதனால் அடுத்த தலைமுறையினர் ‘தமிழ்  என்றால்  என்ன?’ என்று கேட்கும் நிலை ஏற்பட்டு விடும். ஆனால் இந்த பூமியில் தமிழனாகப் பிறந்துவிட்டு நாம் அத்தகைய நிலையைப் பற்றி எண்ணிக் கூட பார்க்க கூடாது. ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’என்ற மகாகவியின் மகத்தான கவிதைக்கேற்ப நாம் அனைவரும் நம் தாய் மொழியை நம்மை ஈன்றெடுத்த தாயைப் போல் பாதுகாக்க வேண்டும். தமிழை நேசிப்போம்.தமிழில் பேசுவோம். தமிழைப் பாதுகாப்போம். நன்றி!

Ref: 29-328727VG

30

சிங்கப்பூரில் தமிழ் மொழியை எவ்வாறு பாதுகாப்பது?

என்னை தாலாட்டிய மொழி

எனதருமை தாய்மொழி !

என் இனிய தமிழ்மொழிக்கு முதல் வணக்கம்!!

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த மொழி நம் தாய்மொழியாம் தமிழ் – என்பதன் பொருள் இனிமை. பல தலைமுறைகள் வீழ்ந்தும் , எழுந்தும் நம் தமிழின் வரலாற்றை சுவையாக்கினர். இவ்வளவு மகத்துவம் வாய்ந்த தமிழின்  புழக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தமிழை தொடர்ந்து வாழவைத்து, அது உயர என்ன  செய்யப்படுகின்றது என்றும், என்ன செய்யலாம் என்றும், சில கருத்துக்களை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.

ஆண்டாண்டு காலமாக சிங்கப்பூரில் பல லட்ச தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இதை உலகிற்கு உணர்த்தவே நம் சிங்கப்பூர் அரசாங்கம்,அதிகாரத்துவ  மொழிகளில் ஒன்றாக தமிழை 1965 ல் இணைத்தது.ஆனால் இன்றைய காலத்தில் பல தமிழ் சமூகத்தினர் தமிழில் பேசுவதை புறக்கணித்து ஆங்கிலத்தில் தான் அதிகம் உரையாடுகின்றனர்.

முதலில் தமிழை நம் வீட்டிலிருந்து பாதுகாக்க ஆரம்பிப்போம்.தமிழ் சமூத்தினரின் வீட்டிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடும் போதும் அனைவரும் கட்டாயம் தமிழில்  உரையாட ஊக்குவிக்க வேண்டும்.

நம் தமிழ்மொழி இலக்கியங்களை விரிவாக கற்கும் போது ,நம்மை அறியாமலேயே நம் பெருமை புலப்பட்டு , நம் நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டுவரும். அப்படி பட்ட இலக்கிய நூல்களை இக்கால சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கும் தொழில்நுட்ப வடிவங்களாகிய செயலிகளாகவோ,கேலிச்சித்திரங்களாகவோ, அவர்களிடம் கொண்டு சேர்த்தால் தமிழ்மொழி மேலும் வாழும்.

அதுமட்டுமல்லாமல் உலகத்தில் முதன்முறையாக எழுதப்பட்ட சுயமுன்னேற்ற நூலாகிய திருக்குறளை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தினமும் கண்டு மற்றும் கேட்டு மகிழும் வசந்தம் தமிழ் செய்தியின் வாயிலாக “ தினம் ஒரு திருக்குறள் “, என்று ஒளிபரப்பட்டால் தமிழ்மொழி மேலும் ஓங்கி நிற்கும்.

தமிழர்களாகிய நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெருவிரைவு இரயில் நிலையங்களிள் இருக்கும் பயணஅட்டை பணம் ஏற்றும் கருவியில், நம் சிங்கப்பூர் அரசாங்கம் நமக்காக தமிழ்மொழியை ஒரு விருப்பத்தேர்வாக வைத்துள்ளது. இந்த வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், தமிழ்மொழி அக்கருவிகளின் உதவியோடு பல வருடங்கள் பாதுகாக்கப்படும்.

இதுமட்டுமா நம் தேசிய நூலகங்களில் உள்ள இரவல் மற்றும் புதுப்பிக்கும் கருவியிலும் தமிழ்மொழி ஒரு விருப்பத்தேர்வாக அமைத்துள்ளது நம் அரசு, அத்தகைய தமிழ்மொழி தேர்வை நாம் உபயோகித்தால் நம் மொழியை அழிவிலிருந்து காப்பாற்றலாம் .

பல தமிழ் சமூகமன்றங்களில், நம் தமிழ்மொழி  மாதம் முன்னிட்டு நடத்தும் பேச்சுப்போட்டி, திருக்குறள் போட்டி, மாறுவேடப்போட்டி போன்ற பல போட்டிகளில் அனைத்து மாணவர்களும் பங்கெடுக்க பள்ளிகளும்,பெற்றோர்களும் ஊக்குவித்தால் நம் இளைய சமூகத்தினரிடம் தமிழை மேலும் உயிரூட்டி வாழ வைக்க முடியும்.

நம் சிங்கப்பூரில் பல இடங்களில் தேசிய நூலகங்கள் இருக்கின்றன அங்கே தமிழ் மொழிக் கென்று பெரும் பிரிவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படிக்கும் விதமாக பல விதமான புத்தகங்கள் இருக்கின்றன, தமிழர்களாகிய நாம் அனைவரும் ஆங்கிலமொழிக்கு இணையாக தமிழ்மொழி புத்தகங்களையும் இரவல் பெற்றால் தமிழை மேலும் பாதுகாக்களாம்.

அங் மோ கியோ  தேசிய நூலகத்தில் மட்டும் மற்ற பகுதி நூலகங்களில் விட தமிழ் புத்தகங்கள் நிறைய காணப்படுகிறது, ஏன்னென்றால் அப்பகுதியில் வாழும் தமிழர்கள் மட்டுமே நிறைய தமிழ்மொழி புத்தகங்களை இரவல் பெருகின்றனர்.

ஆதலால் நம் அரசாங்கம் அப்பகுதி நூலகத்திற்கு மட்டும் வருடத்திற்கு இரண்டாயித்திற்கும் மேற்ப்பட்ட புதிய புத்தகங்களை கொண்டு வருகிறது.

நாம் தமிழை வாழ வைத்து பாதுகாத்தால் ,நம் அரசாங்கமும் நமக்கு மேலும் துணை புரியும் என்பதை இதன்மூலம் உணரலாம்.

“ யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்! “ என்ற மகாகவி பாரதியார் கூற்றிற்கேற்ப நம் மகத்துவமான தமிழ்மொழியை கட்டி பாதுகாத்து மேலோங்கி வாழ வைப்போம்.

 

Ref: 30-048589SV

 

 

 

 

31

தமிழ் மொழியை பாதுகாப்பது எப்படி?

இப்படி ஒரு கேள்வியை பற்றி சிந்திக்கும் நிலைமைக்கு நாம் வந்து விட்டதை எண்ணி நான் மனம் வருந்துகிறேன்! யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று புரட்சிக் கவி பாரதி சொன்னபோதிலும் நம்மில் பலர் நான் தமிழன்டா என்று பெருமையுடன் சொல்ல தயங்குகிறோம் இதை மாற்றிக் கொள்வதுதான் நாம் செந்தமிழை காப்பாற்றுவதற்கான முதல் படிக்கட்டு ஆமாம் டா பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாடி பிறந்த தாய் தமிழின் பெருமை கொண்ட மகன்டா நான் என்று நாம் வீர குரல்கள் மேலோங்க வேண்டும்

தமிழ் மொழியை காப்பாற்றுவதற்கான வழிகள் என்று பார்த்தால் நாம் பல சமூக மன்றங்களில் விழிப்புணர்வு கொண்டு வருவது போல் தமிழ் மொழியை சார்ந்த விழாக்களை நடத்தலாம் தமிழ் எழுத்தாளர்களை கூட்டி வந்து அவர்களை பட்டறைகள் நடத்த சொல்லலாம் அது மட்டுமின்றி மாணவர்களை தமிழ் பாடல்கள் கேட்டு தமிழ் படங்களை பார்க்க ஊக்குவிக்கலாம்  மேலும் என் சொந்த அனுபவத்தில் தமிழ் மொழி  மீது நான் அதிகமாக ஆர்வம் கொள்ள காரணம் என்னவெனில் நான் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன் அதுமட்டுமின்றி பட்டிமன்றங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் சொற்பொழிவுகள் வழங்கி இருக்கிறேன் இவை அனைத்தும் எனக்கு தமிழ் மீது ஆர்வத்தை மேலும் வைத்துள்ளது அதுமட்டுமின்றி மாணவர்களிடம் தமிழர்களின் பெருமைகளைப் பற்றிக் கூறும் போது மாணவர்கள் நிச்சயமாக நம் தாய் தமிழை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வருவார்கள்

நான் ஏன் மாணவர்களை பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம் அதற்கு மூல காரணம் என்னவெனில் மக்களே ஒருமுறை சுவாமி விவேகானந்தர் சொன்னார் என்னிடம் நூறு இளைஞர்களைத் தாருங்கள் ஒரு பாரத தேசத்தை மாற்றி காட்டுகிறேன் என்று சொன்னார் அது இந்தியாவுக்கு மட்டும் பொருந்தாது சிங்கார சிங்கைகும் பொருந்தும் இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள் இளைஞர்களாகிய நாம் தமிழை காப்பாற்ற காப்பாற்றத்தான் வருங்காலத் தலைமுறையினர் தமிழின் பெருமையும் அதன் தத்துவத்தையும் புரிந்து கொள்வார்கள் சிங்கையில் தமிழின் சிறப்பை அறிய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது உதாரணத்திற்கு நம் வானொலி ஒலி 96.8 ஒளிபரப்பப்படும் தூய செந்தமிழை கேட்கும்போது நாம் தமிழை காப்பாற்றுவதில் ஒரு பெரும் பங்காற்றும் காரணம் மேலும் மேலும் ரசிகர்கள் இருக்கும்போதுதான் தமிழும் ஒரு பிரபலமான மொழி அதை நாம் காப்பாற்ற வேண்டும் என்று மற்ற இனத்தவர்களும் நம்முடன் இந்த முயற்சியில் இறங்குவார்கள் அப்படி பண்ணும் போது தமிழை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் மேலும் கூடும் தமிழ் இன்னும் உலகம் இருக்கும் வரை தாராளமாக வாழும் தமிழை பற்றி

அந்த காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களின் நாம் படிக்கலாம் நான் ஒரு தமிழ் இலக்கிய மாணவி எனக்கு தமிழ் இலக்கியங்கள் படிப்பதற்கு மிகவும் பிடிக்கும் முதலில் நானும் தமிழ் புத்தகம் படிப்பதற்கு யோசிக்க தான் செய்தேன் ஆனால் அவற்றை படித்தால்தான் இளைஞர்களே நமக்கு அந்த புத்தகங்களின் அருமை தெரியும் தமிழ் புத்தகத்தை  படிக்கும் போது நாம் நம்மையே மறந்து விடுவோம் என்றே நான் கூறுவேன்  நல்ல நல்ல கதாசிரியர்கள் சிறப்பான கதைகளை நமக்காக எழுதியிருக்கிறார்கள் இதுபோன்ற புத்தகங்களை படிக்கும் போது நிச்சயமாக தமிழ் மொழியை நாம் சிங்கையில் காப்பாற்றுவோம் ஏனெனில் இப்படி ஒரு அழகான மொழியை எவ்வாறு நாம் அழிய விடலாம் என்ற நோக்கம் நம் மனதிற்குள் தோன்றும் அதுமட்டுமின்றி மக்களே நாம் எப்போதும் ஒரு விஷயத்தை நினைத்து பார்க்க வேண்டும் உலகத்தில் முதல் முதலாக உருவெடுத்த மொழிகளில் ஒன்றான தமிழ் இன்றும் உயிரோடு இருக்கிறது மற்ற மொழிகள் அழிந்து விட்டாலும் உயிரோட இருக்கும் சில மொழிகளில் தமிழும் ஒன்று அப்படி பெருமை வாய்ந்த மொழி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாடி வீர மன்னர்களால் பேசப்பட்ட மொழியை நாம் அழிய விடலாமா என்ற எண்ணத்தை நாம் கொண்டாலே நிச்சயமாக தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும்

இதை முன்னிட்டு நாம் என்னென்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்கலாம் நான் சொன்னது போல நிறைய தமிழ் சொற்பொழிவுகளை கேளுங்கள் முடிந்தால் நீங்களும் சொற்பொழிவுகள் கொடுங்கள் அதுமட்டுமில்லாம மொழிசார்ந்த போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள் அது மட்டுமின்றி தமிழ் மன்றங்களில் சேர்ந்து நம் பங்கை ஆற்றுவோம்

என்னை பொருத்தவரை மொழி என்பது மொழி ஒன்றை மட்டும் சார்ந்ததல்ல அது கலாச்சாரத்தையும் சார்ந்தது  ஆகையால் தமிழை காப்பாற்ற வேண்டும் என்றால் நிச்சயமாக நம் தமிழர் பண்பாட்டை கடைபிடிக்கவேண்டும் எப்படி எப்படி எல்லாம் கடைப்பிடிக்கலாம் என்று கேட்டால் நாம்  சில நாட்களில் வாழை இலையில் உணவை உண்ணலாம் அதுமட்டுமின்றி பாவாடை தாவணி வேஷ்டி சட்டை போன்ற உடைகளை அணியலாம் மேலும் இந்த ஒரு விஷயம் என் மனதைக் குத்திக் கொண்டே இருக்கிறது நான் தெரியாமல்தான் கேட்கிறேன் நீங்கள் பள்ளியில்தான் ஆங்கிலம் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் வீட்டுக்கு வந்த பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் தமிழ் பேசினால் என்ன 5 கிலோ குறைந்தா போய்விடுவீர்கள் சகோதரர்களிடமும் பெற்றோருடனும் இவ்வாறு பேசும் போதே நம் தமிழ்மொழியே நிச்சயமாக காப்பாற்றுகிறோம் ஒவ்வொருவரிடம் பேசும்போதுதான் தமிழ் மொழியின் ஆழ்ந்த சிந்தனைகளை பற்றி அறிவோம் காரணம் தமிழ் மொழியில் நீங்கள் சென்று உங்கள் பாட்டி இடம் பேசினீர்கள் என்றால் அவர்கள் அக்காலத்தில் உள்ள தமிழ் மொழி சார்ந்த பல மொழிகளிலும் திருக்குறள்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுவார்கள் அந்த திருக்குறள்களை கேட்கவே ஆஹா அருமையாக இருக்கும்.

இத்துடன் என் உரையின் முடிவிற்கு நான் வருகிறேன் என்னை பொறுத்தவரை தமிழ் மொழியை காப்பாற்றுவதற்கு நாம் நிச்சயமாக தமிழ் மொழியை பேச வேண்டும் மற்றும் நான் தமிழன்டா என்று பெருமையாக சொல்ல வேண்டும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பாரதியார் சொன்னதை நாம் நிச்சயமாக கடைப்பிடிக்க வேண்டும் நாம் நம் தாய் தமிழை தாய்க்கு நிகராக வைத்து பூஜிக்க வேண்டும். தமிழ் பேசுவோம் தலைநிமிர்ந்து நடப்போம் நன்றி வீர தமிழர்களே!

 

Ref: 31-138824KY