தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம், சிங்கப்பூர்.
Website: www.TACS.org. sg; Email: TamilsACSociety.sg@gmail.com
தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம் 1955ல் தொடங்கப்பட்டது. அப்போது அதன் பெயர் ‘வெண்ணிலா கலை அரங்கம்’. அதைத் தொடக்கியவர் ‘சிங்கப்பூர் நாடகத்தமிழ்ப் பெரியார்’ எனப்போற்றப்பட்ட அமரர் திருமிகு வ.க.ஆனந்தம் அவர்கள். வெண்ணிலா கலை அரங்கத்தை அரசாங்கத்தில் பதிவு செய்த நாள் 18.1.1956. அச்சங்கத்தின் அப்போதைய முழு நோக்கம்- சிங்கப்பூர் தமிழர் சமுதாயத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக, மறுமலர்ச்சிக்காக, தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழில் நாடகங்களை மேடையேற்றுவது மற்றும் சிறந்த நாடகக் கலைஞர்களை உருவாக்குவது.