Category: Uncategorized

  • MC Members Pledge.

    1. I pledge to uphold the aim, objectives, mission, vision, and values of the Tamils Arts and Culture Society, ensuring that all actions and decisions reflect the principles and goals of our organization. 2. I will strive for continuous improvement, seek opportunities for personal and organizational growth, stay informed about best practices and emerging trends…

  • 25ஆம் இந்தியர் பண்பாட்டு மாதம்!

    25ஆண்டுகளுக்கு முன்னால் சிங்கப்பூர் அரசு, இந்தியர், மலாய், சீனர் பண்பாட்டு மாத விழாக்களைக் கொண்டாடியது. அவற்றுள் இந்தியர் பண்பாட்டு மாதம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்படிப்பட்ட நிகழ்ச்சியை உலகம் முழுதும் வாழும் தமிழர்களுடன் இணைந்து கொண்டாடவேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் தமிழர் பண்பாட்டு மாத விழா!

  • தமிழ்மொழி வாரம்!

    ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை தமிழ்மொழி வாரம் கொண்டாடினோம். மாணவர்கள், பெண்கள் பலரைத் தமிழ்க்கட்டுரைகள் எழுத ஊக்குவித்தோம். 15ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை பொங்கல் வைக்கும் போட்டியும், மாவு கோலமிடும் போட்டியும் நடத்தினோம். கோலம் வரையும் போட்டியில் பங்கெடுத்த சிறந்த மூவரின் கைவண்ணத்தை நீங்கள் பார்க்கலாம். நீதிபதிகள் தேர்ந்தெடுக்கும் மூவருக்குப் பரிசுகள் அளிக்கப்படும்.

  • வருக வருக!

    வணக்கம். இந்நிகழ்ச்சிக்கு உங்களை வருக வருக என்று அழைக்கிறோம். இன்று நடக்கவிருக்கும் மகிழ்ச்சிமிக்க நிகழ்ச்சி  ஐந்து பகுதிகளைக் கொண்டது. 1.  தமிழர் பண்பாட்டு மாத நிறைவு விழா! 2.  பொங்கல் விழா! 3.  திருவள்ளுவர் புத்தாண்டு 2056! 4.  தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம்! 5.  70ஆம் ஆண்டு விழா!

  • இரண்டாம் பகுதி!

    இரண்டாம் பகுதி! பொங்கல் விழா! அல்லது நன்றி நவிலும் நாள் பல நாடுகளின் அறுவடைத்திருவிழா நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் தொடக்கவிழாவாக அமைந்தது. அவ்விழா ஒரு நன்றி நவிலும் விழாவாக மாறியது!. தைமாதத்தின் முதல்நாள், அறுவடை செய்யப்பட்ட புதிய அரிசியில் புதுப்பானையில், கதிரவன் கிழக்கில் தோன்றும் காலை வேளையில் பொங்கல் வைத்தார்கள். ஆமாம், ஏற்ற காலத்தில் மழையும், வெயிலும் கொடுத்து, பயிர்கள் வளர உதவிய, சூரியனுக்குத்தான் முதல் நன்றி. இரண்டாம் நாள், இரவும் பகலும் மாடாய் உழைத்த மாடுகளுக்கு…

  • பாகம் மூன்று!

    பாகம் மூன்று! தமிழர்களின் புத்தாண்டு! திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மக்கள் தம் அகவாழ்வில் சுமூகமாகக் கூடி வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான, அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூலை எழுதியவர்தான் திருவள்ளுவர் பெருமான்!. pause 1sec தமிழ் பேரறிஞர்கள் பலர் நம் புத்தாண்டு திருவள்ளுவர் பிறந்த ஆண்டான கி.மு 31ஆம் ஆண்டு தொடங்குகிறது என்று முடிவுசெய்துள்ளனர்!. ஆகவே இந்த ஆண்டின்…

  • நான்காம் பகுதி!

    நான்காம் பகுதி! தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம்! தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம் என்பது இதுவரை தமிழர் தகவல் தொழில்நுட்பச் சமுதாயம் என்ற அழைக்கப்பட்ட நம் சமுதாயத்தின் புதிய பெயராகும். இதன் நோக்கம் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல், கலைஞர்களை உருவாக்குதல், பண்பாடு வளர்த்தல், செயற்கை நுண்ணறிவு கற்றல் போன்றவை.

  • ஐந்தாம் பகுதி.

    ஐந்தாம் பகுதி. 70ஆம் ஆண்டு விழா! நம்முடைய தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம் 1955ஆம் ஆண்டு வெண்ணிலாக் கலை அரங்கமாகத் தொடங்கப்பட்டது. இன்று அதன் வயது 70. இதைக் கொண்டாட 70ஆம் ஆண்டுமலர் எழுபது கட்டுரைகளுடன் மலரவிருக்கிறது. இக்கட்டுரைகள் மாணவர்களுக்காக, இளையர்களுக்காக, பெண்களுக்காக, மூத்தோர்களுக்காக எழுதப்பட்டவை. இவற்றை மாணவர்கள், பெரியோர்கள்,பெண்கள், மேலும் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் பலர் எழுதியவை. இந்த 70ஆம் ஆண்டுமலர் விரைவில் வெளியிடப்படும்.

  • Invitation – Community Partners

    Re: Community Partnerships Dear President/Chairman, I am Dr. MaGo, President of the Tamils Arts and Culture Society (TACS), Singapore. Our primary objective is to organize regular cultural events, festivals, and performances that showcase the talents of both local and international Tamil/Indian artists. To further this goal, we seek mutual (non-financial) support to foster unity and…