உலகத் தமிழர்களுக்கான ‘தமிழ் மொழி’ விருதுகள் – 2026

நம் தமிழ்மொழியைக் காப்பது நமது கடமை. உலக அளவில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் கூடியிருப்பினும் அவர்கள் எழுத்து தரமும் சுற்றுச் சூழ்நிலை காரணமாக்க குறைந்து கொண்டே வருகிறது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் வேற்று மொழி கலப்பால் இன்று திராவிட மொழிகளாக (கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலியவை) மருவி விட்டது. ஆம், நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தமிழை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.
அதற்கானத் திட்டம்தான் உலகத்தமிழ்ச் செம்மல் விருதுகள்.
இதை உலகத்தில் பல தமிழ் அமைப்புகளின் உதவியுடன் இணைந்து நம் நோக்கத்தை அடைய முயற்சிப்போம்.
இஃது ஒரு போட்டியல்ல.
இளைய மாணவர்கள் முதல் மூத்தோர், எழுத்தாளர்கள், பாவலர்கள், தமிழ் நிபுணர்கள் அனைவரையும். அவர்களின் திறமையைக் கண்டு அவரவருக்கு உரிய விருதுகளை அளிப்போம்.
இதற்கு உதவி செய்ய பன்னாட்டு தமிழ் அறிஞர்கள் தயாராக இருக்கின்றனர்.
000 00000 000
Preserving Our Tamil Language – Our Sacred Duty
It is our sacred duty to preserve and protect the Tamil language — the priceless heritage of our ancestors.
Although the Tamil population is vast worldwide, the quality of written Tamil has gradually declined due to changing environments and modern influences.
Nearly two thousand years ago, our ancient Tamil, through its interaction with other languages, gave rise to what are now known as the Dravidian languages — Kannada, Telugu, Malayalam, and others.
Today, it is our responsibility to revive and uphold the beauty, purity, and classical depth of the Tamil that was written two millennia ago.
The World Tamil Excellence Awards have been conceived with this noble vision — to rekindle the spirit of classical Tamil and to honour those who strive to sustain it.
Through collaboration with Tamil organisations worldwide, we aspire to realise this shared mission for the enrichment of our global Tamil community.
This is not a competition.
Rather, it is a celebration of talent, knowledge, and dedication — embracing young students, adults, writers, poets, and Tamil scholars alike.
Each will be recognised and honoured with awards befitting their individual contributions and achievements.
Eminent international Tamil scholars have pledged their support to this meaningful endeavour — a united effort to preserve, promote, and celebrate the timeless glory of our Tamil language.
000 0000 000
விருது பெயர்கள்
(ஒருவருக்கு ஒரு விருதே வழங்கப்படும்)
-
தமிழ்ச் செம்மல் விருது
-
பெறுபவர்கள்: 21 வயதிற்குக் குறைந்த இளைஞர்கள், தமிழைப் புதிதாகக் கற்பவர்கள், மற்றும் பிற மொழியினர்கள்.
-
நோக்கம்: தமிழ் எழுத்துக்களையும் எண்களையும் பயன்படுத்த ஊக்குவித்தல்; குறிப்பாக கிரந்த எழுத்துக்கள் (ஹ், ஸ், ஜ், ஷ்) மற்றும் உரோமன் எண்களைத் தவிர்த்தல்.
-
-
தனித்தமிழ்ச் செம்மல் விருது
-
பெறுபவர்கள்: அனைவரும், குறிப்பாக கவிஞர்கள், எழுத்தாளர்கள்.
-
நோக்கம்: வேற்றுமொழிச் சொற்களை அகற்றி, தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டை வளர்த்தல்.
-
-
சங்கத்தமிழ்ச் செம்மல் விருது
-
பெறுபவர்கள்: அனைவரும், குறிப்பாக தமிழில் புலமை பெற்றோர், தமிழ் ஆய்வாளர்கள்.
-
நோக்கம்: சங்க இலக்கியச் சொற்களை மீட்டெடுத்து பயன்படுத்த ஊக்குவித்தல் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெரும் காப்பியங்கள் மட்டும்).
-
விருது நடைமுறைகள்
4. பங்கேற்போர் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
-
படைப்புகள் சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும்.
-
இறுதி நாள்: 14.1.2026
-
முடிவுகள் வெளியீடு: 15.1.2026
-
விருது வழங்கும் நாள்: 17.1.2026
-
நடுவர் குழு
-
பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் வல்லுநர்கள்.
-
அவர்களின் முடிவே இறுதியானது.
-
மூத்த நடுவர்: முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
- நடுவர்கள்:
- முனைவர் திருமதி பொன்னி (ஏற்பாட்டுக் குழுத்தலைவர்)
- முனைவர் திருமதி மீனாச்சி சபாபதி
- கவிஞர் திரு மா அன்பழகன்
- திருமதி தவமணி
- ஒருங்கிணைப்பாளர்கள்.
- முனைவர் மணிவண்ணன் (குழு பிரதிநிதி-இந்தியா)
- திரு பாலமுருகன் – சிப்புட் (குழு பிரதிநிதி-மலேசியா)
- திருமதி நிர்மலா JVNirmala – (குழு பிரதிநிதி-Australia)
-
-
நடத்தும் அமைப்புகள்
-
தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாயம் (www.TACS.org.sg)
-
ஆ.க. கலைக்குழு (www.MAGOwebsiteSG.com/aktclub)
-
சிங்கப்பூர், மலேசியா, இந்திய தமிழ் சமூகங்கள் (முகநூல் ஊடகக் குழுக்கள்) – STC, GTD, MTC
-
மேலும் பல உலகத்தமிழ் அமைப்புகள்
-
-
இணைய செயற்கை அறிவுச் செயலிகள் (AI).
-
நாளொரு தமிழ்ச் சொல்

-
சங்கத் தமிழ்ச் சொல்

-
இவற்றுக்கான இணைப்புகள் பங்கேற்புப் படிவங்களில் குறிப்பிடப்படும்.
-
🔖 குறிப்பு: அனைத்து படைப்புகளும் சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். உங்கள் கட்டுரை 1.1.2024 முதல் 1.3.2026க்குள் நாளேடுகளில், வார அல்லது திங்கள் இதழ்களில் பிரசுரிக்கப்பட்டவையாக இருக்கலாம்.
📩 பங்கேற்க: படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
<< பங்கேற்பு படிவம்.
https://forms.gle/sAPwC89j85dKRTM2A
நல்ல தமிழில் கட்டுரை எழுதுவதற்கு ஏதாவது ஒரு தலைப்பு. (200 சொற்களுக்குள் இருக்கவேண்டும்).
- தன்னம்பிக்கை – இளமையின் தூண்
- கடின உழைப்பு – வெற்றியின் சாவி
- நேரம் – இளமைக்கு அரிய செல்வம்
- சுய ஒழுக்கம் – வெற்றியின் வேர்சொல்
- தமிழர் பண்பாடு – உலகுக்கே வழிகாட்டி
தனித் தமிழில் கட்டுரை எழுதுவதற்கு ஏதாவது ஒரு தலைப்பு. (250 சொற்களுக்குள் இருக்கவேண்டும்).
- மொழி – இனத்தின் உயிர்
- தாய்மொழி காக்குதல் – தலைமுறை கடமை
- தொழில்நுட்பம் – நண்பனா? பகைவனா?
- சமூக ஊடகம் – ஆசீர்வாதமா? அபாயமா?
- செயற்கை நுண்ணறிவு – எதிர்காலத்தின் முகம்
- இணையம் – அறிவின் அருவி
- நாடு – தாயின் உருவம்
- ஒற்றுமை – வலிமையின் அடித்தளம்
- மக்கள் சேவை – மனிதனின் உயர்ந்த கடமை
- இளைய தலைமுறை – நாட்டின் நம்பிக்கை
சங்கத்தமிழில் கவிதை அல்லது கட்டுரை எழுதுவதற்கு ஏதாவது ஒரு தலைப்பு. (300 சொற்களுக்குள் இருக்கவேண்டும்).
- தமிழ் – உலகின் தொன்மைச் செம்மொழி
- சங்க இலக்கியம் – வாழ்வின் நெறி நூல்
- தமிழர் பண்பு – அறத்தின் அடித்தளம்
- விருந்தோம்பல் – உயர்ந்த தமிழர் இயல்பு
- “யாதும் ஊரே” – உலக சகோதரத்துவத்தின் வாக்கு
- மூதாதையர் மரபு – இனத்தின் முதுகெலும்பு
- தாய்மொழி – தாயின் தாய்மை
- அகம் – மனத்தின் உலகம் / புறம் – வீரத்தின் வெளி
- உண்மை – உயிரை விட மேலானது
- ஒற்றுமை – வலிமையின் வேராய்
00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0
(Updated: 22.11.2025 at 2pm)
