வரலாறு (1956)
வெண்ணிலா கலை அரங்கத்தின் முதல் முழுபடைப்பாக ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற நாடகம் 1957ல் கலைமண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ‘மீண்ட வாழ்வு’ எனும் நாடகம் 1958ல் நடத்தப்பட்டது. இதன் மற்றொரு படைப்பு ‘இலட்சியவாதி’ எனும் முழு நாடகம் 15.5.1966ல் விக்டோரியா தியேட்டரில் நடைபெற்றது.
1970களில் சிங்கப்பூர் இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 23 வயது முனைவர் (கேப்டன்) மா.கோவிந்தராசு அவர்களை அவ்வரங்கம் தலைவராக அழைத்தது. அவர் தம்முடைய மாணவ பருவத்திலிருந்தே பள்ளி மேடை நாடகங்களில் பங்கேற்று உள்ளூர் நாளேடுகளில் பாராட்டப்பட்டவர்.
இளையரான அவர் இந்தியர் கலைச் சங்க மேடை நாடகங்களிலும் நடித்திருந்தார். அதன்பின் வெண்ணிலா கலை அரங்கம் நாடகங்களில் மட்டுமல்லாது கலைநிகழ்ச்சிகள், சடுகுடு போன்ற தமிழர் மரபுசார்ந்த விளையாட்டுகளையும் நடத்தினார்.
1975ல் சிங்கப்பூர் பெண்களுக்கும், சொஹுர் (மலேசிய) நாட்டு பெண்களுக்கும் இடையே புக்கிட் பாஞ்சாங் பள்ளித் திடலில் சடுகுடு போட்டி சிறப்பாக நடந்தது. இசை, பாடல், நடனப் போட்டிகளும் இடம்பெற்றன.
1955 முதல் – 1975 வரை
Photo below taken in 1975 – On the left to right: MR M Govindaraju, Mr Thanapathy and Mr Sinnappa (the most senior in the VKA).
‘தமிழர் தகவல் தொழில் நுட்ப சமுதாயம்’ – பெயர் மாற்றம்.
2008ல் திரு மா கோவிந்தராசு சங்கத்தின் பெயரை நாட்டின் தேவைக்கேற்ப ‘தமிழர் தகவல் தொழில் நுட்ப சமுதாயம்’ என்று மாற்றினார். குறிக்கோள்களும் மாற்றப்பட்டன. அதற்கேற்ப இணையம் வழி கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.
Picture on the left: Mr M Govindaraju
புத்துணர்வு – 2018
2018ல் இளையர்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி அணி ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இலவச துணைப்பாட வகுப்புகள் நடத்தப்பட்டன, ‘நாளை நமதே’ எனும் பேச்சாளர் தொடர்கள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு கைத்தொழில் பயிற்சிப்பட்டறைகளும் நடத்தப்பட்டன.
அமைப்பின் சின்னம் 6.11.2021ல் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது. பொங்கல் விழாவிற்கான காணொளி போட்டிகள் நடைபெற்றது. செப்டம்பர் மாதம் 2021ல் TLC ஏற்பாடு செய்த இளையர் விழாவிற்காக பட்டிமன்ற போட்டி நடைபெற்றது. அதே ஆண்டு உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், கணித வகுப்புகள் இணைய வழி நடத்தப்பட்டன.
2022ல் குடும்ப பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழ்மொழி மாத விழாவிற்காக TLC, TLLPC ஆதரவு நல்கியது.
2023ல் தமிழர் கலைப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இச்சங்கத்திற்கென பாடலும், குறிப்பாக இளையர்களுக்காக இயற்றப்பட்டுள்ளது.
2023ல் தமிழ்மொழி மாத விழாவில் தமிழ் வளர்க்க நடத்தப்பட்ட கலைப்போட்டி நிகழ்ச்சி பலரையும் கவர்ந்தது.
Group Photo taken at a Singapore National Day Celebration.