நான் தமிழ் பேசும் மாணவன் நான் தமிழில் புலமை பெற்றவன் அல்லேன் ஆனால் தமிழ் மொழி தோற்றம் பற்றியும் ஏனைய உலக மொழிகள் தோற்றம் பற்றியும் அறிய விழையும் ஆராய்ச்சி மாணவன். எனது ஆராய்ச்சி புலமை சாதாரணமானது. ஏதோ ஒரு கேள்வியில் பிறந்து வளர்ந்து செல்கின்றது. நம் பலரில் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது என்றும் தொல்காப்பிய நூல் இலக்கணம் இலக்கியம் படைத்த ஒரு காப்பியம் என்றும் பல மொழிகளுக்கு முன் தோன்றிய மொழியின் ஒரு காப்பிய இயக்கம் தொல்காப்பியம் என்றும் நான் கருதுகிறேன். நீங்களும் அந்த கருத்துடன் இணைந்து வருவீர்கள் என்று நினைக்கின்றேன்.
நான் படித்த தமிழ் மொழி வரலாறு சார்ந்த இரண்டு புத்தகங்கள் ஒன்று பரிதிமாற் கலைஞர் எழுதியது மற்றொன்று மீனாட்சி சுந்தரனார் எழுதியது இரண்டும் தீவிரமாக நான் படித்தேன் என்று சொல்வதற்கு இல்லை, இருப்பினும் பரிதிமாற் கலைஞரின் கூற்றாக சமஸ்கிருதம், தமிழழும் இரண்டையும் ஒப்பிடும்போது, தமிழ் இன்றும் வழக்கத்தில் உள்ளது போற்றத் தகுந்தது என்றும், சாதாரண மக்களும் மொழி பேசுவதனால் தமிழ்மொழி இன்றும் பயிலப்பட்டு வருகின்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதுவாம். தமிழ் மொழி பொது மக்களால் பேசப்பட வேண்டும் என்பது முக்கிய கருத்து, இல்லாது போனால் சமஸ்கிருதம் பேச்சு வழக்கு இழந்தது போல் ஆகிவிடும். அதுவே மீனாட்சி சுந்தரனார் முந்து தமிழ் பற்றி ஆராயப்பட வேண்டும் என்பார். தொல்காப்பியத்தின் ஒவ்வொரு பாவின் கருத்தும், அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்றும் ஆராயப்பட வேண்டும் என்று சொல்வார். தமிழ் மொழி தொன்மையானதோடு கீழடி தரவுகளும், தொல்காப்பியமும் ஏனைய சங்க காப்பியங்களும், மக்களிடையே நிலவும் நம்பிக்கை அல்லது சொல்வடை வழக்கு மொழிகளும், அதாவது இலெமூரிய கண்டம் கடல் கொண்டதும், பல காப்பியங்கள், ஓலைச்சுவடிகள் கடல், ஆறு, நெருப்பு, காலம் என அழிந்ததும், கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்றும் நம்மிடையே இருப்பினும், மேலும் தரவுகள் தேவைப்படுகிறது. அத்துடன் சிலர் திராவிட மொழி குடும்பத்தை, நாகரீக கூறுகளை தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ அழிக்க முனைவதும் வேதனைக்கு உரியது, அவை நமது உரிமையை கடமையை காட்ட நமக்கு ஊக்கமும் ஒற்றுமை அவசியத்தையும் காட்டக்கூடியது. இது இவ்வாறு இருக்க, தமிழை நாளும் பேசுவதையே மறந்த நிலையில், இணையத்தில் மெய்கண்டார் எனும் யூடியூப் எனும் இணையவழி கருத்து பரிமாற்ற குழுவமைப்பில் இணைந்தது முதல் ஒரு புத்தாக்கம் பெற்றது, எனது தமிழ் தேடல் பயணம். தமிழில் பேசவேண்டும், எழுத வேண்டும் என்பதுடன், துப்பு என்ற சொல் சுமேரியரால் பயன்படுத்தப் பட்டது என்பதோடு, சுமேரியர் பேசிய மொழி, அனைத்திந்திய மொழிகளுக்கும், சமஸ்கிருதத்திற்கும் மூலமாக திகழும் மொழி என்றும், சங்கம் என்ற சொல்லும் அங்கு பயின்றுள்ளது என்றும், சுமேரியர் முதலாம் தமிழ் சங்கம் சார்ந்த மக்களாக இருக்கக்கூடும் என்ற விபரங்களை தெரிவித்த மலேசியா லோகநாதன் அவர்கள் அளித்த ஊக்கம், எனது பயணத்தை சுமேரியரின் இலக்கியங்களை நோக்கி ஆர்வத்தை தூண்டியது. அதுவும் துப்பில்லம் பயிலகம் ( e-dub-ba-a) என்ற கல்வி நிலையம் அமைப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அதுசமயம் பொறியியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ( NITTTR – Chennai) மூலமாக சென்னை பல்கலைக்கழகம் வழியாக பொறியியல் கல்வியில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவனாக இருந்தமையால், அக்காலத்தில் கல்வி முறை எப்படி இருந்தது என்று ஆர்வம் மேலிட, அதுவே ஒரு தொடக்கமாக அமைந்தது. இன்று நான் தெளிவோடு ஆரம்ப கால சுமேரியர் தமிழ் பேசினர், தமிழில் எழுதினர், தமிழிலே சொல்லி கொடுத்தனர் என கூற இயலுகிறது. விந்தை தான் யார் இந்த ஆரம்பகால சுமேரியர் என்ற கேள்வி இன்றும் கேட்கப்படுகிறது. உங்களுக்கும் அந்த கேள்வி எழும், அத்தோடு அவர்கள் எப்படி தமிழ் கற்றார்கள், அவர்கள் எங்கிருந்து சென்றார்கள், அவர்கள் உண்மையில் யார் என்ற கேள்வி எழும். அவர்கள் பேசியது தமிழே என்றால், தமிழின் முந்து வடிவம் என்றால் தமிழ் மொழி வரலாற்றில் நிச்சியம் ஒரு இடம் தரவேண்டும். அத்தோடு அவர்கள் எழுதியது தமிழ் என்றால், அவர்கள் எழுத்து முறைக்கும் ஒரு இடம் தரவேண்டும். தமிழரின் சரித்திரம் சுமேரியரின் பங்கு அல்லது அதற்கும் முந்திய கால தமிழர் பங்கு, மேலும் உலக அளவில் தமிழரின் பங்கு என்னவாக இருக்கும் என்பது தீவிர ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், தமிழ் மொழி ஆதி மாந்தர் பேச ஆரம்பித்த மொழி என்றும் முதலாம் சங்க காலத்திற்கு முன்பே நன்கு வளர்ந்து சங்கம் தோன்றி தமிழ் மேலும் வளர்ந்தது என்றும் இலெமூரியா கடல் கொண்டது போன்ற ஏதோ நிகழ்வுகளால், நமது பெரும் காப்பிங்களும், மக்கள் பலரும் கடல் கொண்டு சென்றது எனவும் ஒரு அறிவு கருத்து நம்பிக்கை என பலவாக உள்ளது. இதுவே நான் சுமேரிய மொழியை ஆராய முற்பட்ட போது, அவர்கள் தமிழர், தமிழ் மொழி இங்கு நன்கு வளர்ந்த பின்பு அங்கு குடியேறி நாகரீகம் அமைத்தனர் என்றும் அதன்பின் அவர்கள் மற்ற மக்களுடன் நன்கு கலந்து ஒருவரில் ஒருவராக கலந்து விட்டனர் என்றும், அவர்களில் சிலர் வியாபாரம் புரோகிதம் பாணர் நோக்கில் சிந்துசமவெளி பகுதி மக்களுடன் உறவு கொண்டிருந்தனர் எனவும் நான் கருத வாய்ப்பு ஏற்பட்டது. சுமேரியரை பற்றி ஆராய்ந்த மேலை நாட்டு அறிஞர்கள், சுமேரியர்கள் எங்கிருந்து வந்தனர், எங்கு சென்றனர், எந்த மொழி பேசினர் என அறிய இயலவில்லை என்றும், சுமேரியர் தங்களை கருப்பு தலையினர் என்றும் சிந்துசமவெளி மக்களுடன் வியாபார தொடர்பு கொண்டிருந்தனர் எனவும், சுமேரியர் பேசிய மொழி அழிந்துவிட்டது என்றும், இன்று யாரும் சுமேரியர் மொழியை பேசவில்லை என்றும் கூறுவர். சுமேரிய மொழி சீர்கள் சொற்கள் திராவிடம் தமிழ் சொற்களுடன் தொடர்பு தெரிகிறது என்றும், நாகரீக தொடர்பும் உள்ளது என்றும் இந்திய மொழிகள் அனைத்திற்கும் மூலமொழியின் வடிவத்தில் இருக்கிறது என்ற மலேசியா லோகநாதன் அவர்களின் கூற்றை ஏற்கவில்லை, தரவுகள் போதுமானவை இல்லை என்று மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நிராகரித்துவிட்டனர். இந்த நிலையில் லோகநாதன் அவர்கள் அளித்த தகவல் துப்பு இவை எடுத்து ஆராய்ந்த நான் ஆரம்ப கால சுமேரியர் தமிழ் நன்கு வளர்ந்த பின்பே மெசபொட்டோமியா பொட்டல் பூமி சென்றிருப்பார்கள் என்றும், ஆக தமிழ் மொழி வரலாறு அதற்கேற்றவாறு மாற்றி அமைக்கவேண்டும் என்றும் தேவை ஏற்படுகிறது. ஆரம்ப சுமேரியர் இலெமூரியா கடல் கொண்டது போல், ஏதோ ஒரு காலத்தில், கடல் சீற்றத்தின் விளிம்பில் தப்பி பிழைத்து அன்றே இடம் பெயர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என கருத வாய்ப்பு உள்ளது. சுமேரிய காப்பியங்கள் வழியாக தில்முன் என அறியப்படும் இடம் அவர்களின் பூர்வீகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த இடம் மலை காடு கடல் துறைமுகம் வளம் சார்ந்த இடம் எனத்தெரிகிறது. அந்தவகையில் அது முசிறி போன்ற பழம் துறைமுகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இலங்கை கன்னியாக்குமரி இது போன்றும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்றைய மரபணு ஆராய்ச்சி ஜே-2 என்ற வகை தோடர் இனத்திற்கும் அரபு வகையராவுக்கும் தொடர்பு காட்டுகிறது. மேலும் சுமேரிய மக்கள் வடமேற்கு சகாரா பகுதிகளில் இருந்தும் வந்திருக்க கூடும் எனத்தெரிகிறது. தில்முன் என்ற இடம் பாகரைன் பகுதி எனவும் சில ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகின்றனர். ஆரம்பகால சுமேரியர் தமிழ் நன்கு வளர்ந்த பின் அங்கு சென்று நாகரீகம் வளர்த்தனர் என்ற அளவில், தமிழர் மொழி வரலாறு எவ்வாறு இருக்கும் என சிந்துசமவெளி நாகரீகம், திருக்குறள், தொல்காப்பியம் , இவற்றின் தரவுகள் மூலமும் தேட வேண்டியுள்ளது. தொல்காப்பியத்தின் மரபியல் அவர் காலத்திற்கும் முந்திய பழங்காலத்தில் இருந்து மொழி வளர்ந்து நிலைபெற்ற வழக்கை முறையை குறிப்பதாக காணலாம், அந்த வகையில், மலேசியா லோகநாதன் அவர்கள் தொல்காப்பியரின் ஒத்த காட்சி முறையே சுமேரிய தமிழர் காப்பியங்களை மீட்டுறு செய்ய உதவும் என்பார். இவற்றை கருத்தில் கொண்டு இந்த கட்டுரை தமிழர் மொழி வரலாற்றை ஆதிமனிதர் முதல் இன்றைய காலம் வரை என்ற கோட்பாட்டை கருதுகோளை கட்டமைக்கிறது. இது மேலும் ஆராய்ச்சிக்கு உரியது.
சுமேரியன் தங்கள் மொழியை eme எமே என்ற ஒலி குறிப்பில் தங்கள் மொழி – நாக்கு எனும் பொருளில் மேலை நாட்டார் கண்டறிந்தனர். சுமேரியர் தமிழே பேசினர் என்றால் நம் மொழி எம் மொழி தமிழீ என்றும் பலவாறாக நாம் காணலாம். நாக்கு என்பது கருவியாகு பெயராக பயண்படுத்தியுள்ளார்கள் என கருதலாம். சுமேரியர் தமிழே பேசினர் அதுவும் நன்கு வளர்ந்த பின் சென்றனர் எனும்போது கீழ்க்கண்டவாறு நான் எனது கருதுகோளை முன்வைக்கிறேன்.
ஆரம்ப சுமேரியர் முசிறியில் இருந்து சென்றிருக்கலாம், அது ஆப்ரிக்க அமேசான் காடுகள் போல் வளமும் துறைமுகமும் மலையும் ஒன்று சேர்ந்து அமைவதோடு, ஆரபிகடலின் கிழக்கில் உள்ளது, கடல் ஆமைகள் இந்தப் பக்கம் இருந்து அந்தப்பக்கம் சென்று முட்டையிட்டு இன்றும் வருகின்றன. இதே மலைத்தொடரின் ஒரு பகுதியில் தோடர் உள்ளனர் கூர்க் சித்திகள் நம்பூதிரிகள் மகன் மங்களூர் என சுமேரிய சீர்கள் தாங்கிய மக்கள் குழுக்கள் உள்ளனர். இவர்கள் இங்கிருந்து அங்கு சென்றனரா,
அங்கிருந்து இங்கு வந்தனரா என அறிய முடியாமல் காலத்தால் முன்னும் பின்னும் சென்று நன்கு கலந்து விட்டனர். இவர்கள் சிந்துசமவெளி சார்ந்தும் கடல்வழியாக நன்கு கலந்திருக்கவும் கன்னியாகுமரி காவேரி பூம் பட்டினம் விசாகப்பட்டினம் பர்மா கல்கத்தா இலங்கை என பயணித்தும் நன்கு கலந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த கடல் கரை சார்ந்த ஆராய்ச்சி பெரும்பாலும் மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் இருந்து வருகிறது. தமிழ் மொழி தக்ஷினபீடபூமி பகுதியில் ஆதி குடிகள் மூலம் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு சங்கம் வரும் முன் ஒரு முதல்நிலை அடைந்திருக்க வேண்டும். இந்த வளர்ந்த நிலை தொல்காப்பியரின் மரபிலும் சுமேரிய சீடர்களும் சிந்துவெளி பட எழுத்துக்களும் இன்றும் நமக்கு காட்டும். கோண்டி மொழி வல்லுனர் அரச இலை தாங்கிய மனித குச்சி வடிவ எழுத்தை ஆயா தெய்வம் என்று சொல்லுவார். ஆயா என்பது நாம் அறிந்த சொல், அத்தோடு சுமேரியர் சூரிய கடவுளின் துணைவியாரை ஆயா என்றனர். ஆக சிந்துசமவெளி சுமேரியர் நடுவில் பாரசீகம் இங்கு தக்ஷினபீடபூமி என முந்து கால தமிழே பேசப்பட்டது அறியப்பட்டது என முன்மொழிகிறேன்.
மேலும் இதன் தொடர்ச்சியாக இவர்கள் வழி வந்த தொல்காப்பியர் திருவள்ளுவர் என நான் காணும் கருத்தை ஆராயவேண்டும். மனித விலங்கு மற்ற உயிர் இனங்கள் தங்களுக்குள் பேசுகின்றன, அவை அவை மொழியில். அவ்வகையில் முதல் திருக்குறளை இவ்வாறு காணலாம்: ஆதி பகவன் முதற்றே (காரணத்தாலே) அகரமுதல எழுத்தெல்லாம் (எழுச்சிகள் உணர்ச்சிகள் வெளிப்பாடாக மொழிகள்) உலகு (உலகில் வழங்குகின்றன). அதுபோல் தொல்காப்பியரின் மெய்பாட்டியலை உணர்ச்சிகளின் வெளிப்பாடாக காண மொழிகள் ஆதி குடிகள் தோன்றும் போதே தோன்றிய குறிப்பும், அது பிற்பகுதியில் நோக்கும்போது உந்தி எழும் காற்று எழுச்சியின் சக்தியின் வெளிப்பாடு எனவும் காணலாம். அத்துடன் தொல்காப்பியரும் திருவள்ளுவரும் உலக மக்கள் அனைவருக்குமாக தமிழில் நாம் அறிய கொடுத்துள்ளனர்.
ஆக நாம் தமிழ் மொழியை நம் தாய்மொழியை போற்றும் தருணத்தில், அனைத்து உலக மொழிகளும் தம் தம் தாய் மொழி மூலமாகவே வளர்ந்துள்ளன என்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் உள்ளது என்றும், நம் தமிழ் மொழி நன்கு வளர்ந்து காப்பாற்றப்பட்டு பல மொழிகளும் மேலும் வளர துணை நின்றதாகவும் கருத வேண்டும்.
அத்துடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடைமைக் கருத்து தமிழரின்மொழி சான்றோர் வழி வரும் கருத்து எனவும் காணவேண்டும்..
ஆக நமது ஆராய்ச்சி கடமை முந்து தமிழ் இன்றைய தமிழ் நாளைய தமிழ் என அமைகிறது. சங்கம் தமிழ் வளர்த்தது போல் தமிழ் வளர போற்ற கடமை உரிமை உள்ளது.
நன்றி
புருஷோத்தமன் பெ
================
முந்து தமிழில் இன்று உள்ளது போல் எழுத்து இல்லாத காலத்தில் அனைத்து இயற்கை இயல்பான ஒலி சார்ந்த சொற்கள் இருந்திருக்க வேண்டும்.. இதை நாம் சுமேரிய தமிழர் சொற்களை மீட்டுறு செய்யும் போது அறிய வரலாம்.
தமிழும் பல காலமாக பேச்சு மொழியாக இருந்திருக்க வேண்டும்…
இதையே தொல்காப்பியம் எழுதிய காலமும் அவர் தரும் மரபியல் சார்ந்த கருத்துக்களும் ஒப்பிட்டு காணலாம்..
தொல்காப்பியரின் எழுத்தின் இயக்கம் பகுதி முக்கியமானது.. மக்களுக்கு சுதந்திரமும் இருந்தது எழுதும் போது மொழியை காக்க சில உத்திகளும் இருந்தன.. ஆனால் எழுத்து சின்னங்கள் மாறி வந்ததால் .. நமக்கு கடினமாக உள்ளது..
க.. என்பது தங்கம், காக்கா இவற்றில் பயிலும் முறையை நோக்க எழுத்தியல் திரியதென்பரும் ஒலிப்பில் வேறு இருந்ததையும் அறிய முடிகிறது.. இது ஆராய்ச்சி நோக்கில்.. இதுவே முந்து தமிழ் பல திராவிட மொழிகளாக பின்னர் பிரிந்து பார்க்கப்பட்டது.. இதை நாம் நடுவில் எதிர்பார்க்கவில்லை..
இன்று நிலவும் அரசியல் நிலைகளையும் அன்று எதிர்பார்க்கவில்லை.. போலும்..
சுமேரிய ஆரம்ப எழுத்தாக ஆறு படம் இரு வளைந்த கோடாக காட்டி அதை அ, ஆ, ஆறு, அய்யா என பல சொற்களை குறிக்க பயன்படுத்தினர்.. இது ஆரம்ப கால சிக்கல்.. இன்று நமக்கு வேறு பல சிக்கல்கள்..
முனைவர் புருசோத்தமன், பேராசிரியர் (ஓய்வு), கட்டிட துறை சிவில் பொறியியல் என எடுத்துக் கொள்ளலாம்..
நன்றி..
